பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

வஞ்டம் வீசுமாம்! மல்லி மஞ்சம் விரித்திருக்குமாமே உனக் காக. இது உண்மைதானே இன்பக்காற்றே:

ஆகா...ஹா! உன் அழகே அழகு! அழகுசிரித்தாடும் மலர் களேயே நீ தன் வயப்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்திருக் கிருயே! என்னே உன் ஆற்றல்! அன்பு, பண்பு'

வரும் வழியில் இத்தனை இயற்கை அழகுகளைக் கண்டு புளகாங்காங்கிதமுற்ற நீ; அதோ இருக்கும் அந்த இருண்ட காட்டில் நுழைந்தாயா?

புகுந்திருப்பாய், புகுந்திருப்பாய்! உன்னைத் தடுப்பவன் யார்? நீதான் எங்கும் நுழைபவனுயிற்றே!

அந்த இருண்ட காடு தான் எனது சமுதாயம்! என் சமுதாயம் காடாகத் திகழ்ந்தால் அங்கே சேறும் சகதியும் காணப்படுகிறது.

அந்த நாற்றத்தை சீர்திருத்தக் கொள்கையால் சீர்படுத்துகிருய் நீ!

மேடு பள்ளங்களைக் கொண்ட சமுதாயத்தை நீ சமத்துவ சமண்படுத்துவதை நான் உணர்கிறேன்.

இல்லாவிட்டால் ‘கருங்காலி மரத்தை யொத்த சில மக்கள்மீது சந்தன மரத்தின் நறுமணத்தைத் தவழி விடுவாயா?

சந்தன மரத்திலே நீ தவழும்போது அந்த மரத்திலே தேன்கூடு ஒன்று கட்டப்பட்டிருந்தது.

தேன் இனிப்பைத்தான் தரும். சுவைக்கப்படும் பொழுது நீ அந்தத் தேன்கூட்டிலே தவழ்ந்ததால் அது மணத்தையும் தருகிறது. என்னே உன் சேவை:

காட்டிலே நீ உலவப் புறப்பட்டபோது புண்ணை, தேக்கு, ஒதியம், வேம்பு, பூவரசு, மூங்கில், தூங்குமூஞ்சி, கொங்கு போன்ற பல மரங்களையும் பார்த்திருப்பாய்.