| 1 ||
பூவை நீ அணைக்கும்போது அதனுள்ளிருக்கும் தாதுவான மகரந்தத்தையும் அன்ருே மகிழ வைக்கிருய்.
அந்த தாதுக்களும் உன்னை உளமார சிரித்து வாழ்த்தி பன்ருே இனிமையாக வரவேற்கின்றன!
பூவான பூமியை நீ அணைத்து உலா வரும் போது, அந்தப் பூமியில் பதியும் மகரந்தம் போன்ற மக்களும் உன்னைக்கண்டு இதயப்பூர்வமாக சிரித்து வாழ்த்தி வரவேற். கிரு.ர்கள்.
தென்றலே நீயும் மனித இனத்தின் உள்ளங்களை ஆட்கொண்டு அவர்களை அகமகிழ வைக்கிருய்!
மக்கள் உள்ளமும் மலரைப் போன்று மென்மையானது அல்லவா?
அதஞலன்ருே. அவர்கள் உன்னைக் கட்டித் தழுவி ஆர அணைத்துப் பூரிக்கிரு.ர்கள்.
தென்றலே நீ யார்? ஏனென்ருல் உன் பெயரை மட்டும் தான் கேட்டிருக்கிறேன்.
உன் ஊர், தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை? ஏதோ அருவமாக மாலை நேரங்களில் வருகிருய்!
குறிப்பிட்ட வசந்த காலத்தில்தான் என் அகக் கண்ணுல் உணர்வால் நான் உன்னைக் காண்கிறேன். நேரில் பார்க் களாமென்ருல்தான் முடியவில்லையே!
நீ ஆளு. பெண்ணு என்று என்னுல் அறிய முடியவில்லை! புலவர்கள் உன்னை பெண் என்று கூறுகிருர்கள்.
- தென்னன்’ என்ற பெயரும் உனக்கு உண்டல்லவா? அதஞல் நீ ஆளுக இருப்பாயென்று நம்புகிறேன்.
ஆஇக இருந்தால் நீ பெண்ணைக் காதலிக்க உரிமையுண்டு.
பெண்ணென்ருலும் சரி, நீ ஆணைக் காதலிக்க முடியும்.