பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 2

ஆனல், நீதான் ஆணையும் பெண்ணையும் காதலிக்கிருயே: அதனுலன்ருே உன்னைக் கண்டதும் ஆண் பெண் இரு பாலருக்குமே காதல் நோய் முகிழ்த்து விடுகிறது:

இது என்னே உன் கோலக் கூத்து! உன்னை நம்பமுடிய வில்லை தென்றலே! ஏனென்ருல் நீ இருவரையும் கிள்ளி மோத விட்டு வேடிக்கைப் பார்க்கிருய்!

எப்படியானுலும் மக்கட்கு உதவியைச் செய்கிருய்.

தென்னனே எனது இதயம் கவர்ந்த இன்பமே, நான் அரசியல்வாதி:

உன்னே இந்தக் கண்ணுேட்டத்திலே காண மாட்டேன்: நீ ஆண் பெண் இருபாலரையும் மகிழ்வூட்டுகிருய்: கவருகிருய்!

இன்ப ஒற்றுமையை ஊட்டி வளர்க்கிருய் வருங்கால வாரீசுகட்கு வழி காட்டுகிருய்.

அதைத்தான் நான் எனது இதய அரங்கிலே எழிலோவியமாகக் காண்கிறேன்.

நீ வந்ததும் நாடு உவகை பூக்கிறது! மகிழ்ச்சி தானே மனதுக்கு விருந்து.வாழ்க நீ!

பூவை அனைத்து தாதென்ற உள்ளங்களைப் பறித்துக் கொண்டு காலமெனும் நதியிலே நீ தவழ்கிருய்!

காலமெனும் நதி வற்ருது ஒடும் ஒரு ஜீவ ஆறு.

அந்த ஆறு எத்தனையோ வரலாறுகளைச் சமைத்திருக் கிறது,

எத்தனை யெத்தனையோ வரலாறுகட்கு கல்லறையும் கட்டியிருக்கிறது:

சாக்ரடீசுக்கு நஞ்சு தந்து சாகடித்தது யார்?