பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 13

ஜோன் ஆப் ஆர்க்கை எரியவிட்டது யார்? ஏசுவைத் துடிக்கத் துடிக்க அறைய விட்டது எது? காந்தியாரின் சாகாப்புகழ் கென்னடியின் கல்லறை இந்த வரலாறுகளை கணக்குத் தவருமல் எழுதி முடிப்பதும் இந்தக் காலம் அல்லவா?

அந்தக் கால நதியிலேதான் பிறந்தவனும் நீராடுகிருன்: இறந்தவன் எலும்புகளும் கரைக்கப்படுகின்றன:

மலர்களை மலர வைப்பதும் மடிய வைப்பதும் அதே காலம்தானே!

புதுமணத் தம்பதிகளை நீராட அனுமதிப்பதும் புருஷனை இழந்தவளின் தாலியை ஏற்றுக் கொள்வதும் இதே காலநிதி தான். இதைப் பல இடங்களிலே பார்த்திருக்கிறேன் தென்றலே!

அது காலத்திற்கேற்ற நிலைமைகளைத் தழுவி கால கர்த்தாவாக நடமாடுகிறது.

அப்படிப்பட்ட கால நதியையும் நீ தழுவிக் கொண் டாயே! என்னே உன் சக்தி, வீரம், ஆற்றல்.

காலத்தையும் உன் பக்கம் இழுக்கும் சக்தி உனக்குண்டு என்பதை நிரூபிக்கத்தானே காலத்தைப் பல பிரிவாக வகுத்து குறிப்பிட்ட ஒரு காலமான வசந்தத்தின் போது மட்டும் நீ வருகிருய்! போகிருய்!

இத்தகைய சக்தி படைத்த என் அருமைத் தென்றலே! உன்னை உளமாற நான் போற்றுகின்றேன்.

உன் வீரம் என் இனத்திற்கும் தேவை யென்பதால்! வாழ்க நீ தென்றலே வாழ்க நீ வையம் உள்ளளவும்

தென்றலே! இவ்வாறு நீ ஓடி வரும்போது வழியில் அருவியின் தோளிலே உந்தி உந்தித் தாண்டவமாடுகிருய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/114&oldid=564558" இலிருந்து மீள்விக்கப்பட்டது