பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o S

தாயான தெங்கிற்குச் சேய் அதன் இளம்பாளை.

அந்தப் பாளையிலே வழித்தோடும் சேய்மை அழகை நீ சுவைத்து அந்த மகிழ்ச்சிக் கனையை-இந்த மொழித் துரோகிகட்கு-உணர்த்த-அன்பூட்ட விரும்பினுயோ?

தாயிற்கு ஏற்பட்ட மானத்தைத் தடுப்பது சேயின் கடமை என்பதை உலகுக்கும்-இந்த துரோகிகட்கும் அறிவு உணர்த்தத்தான் அந்த இளம்பாளையை தென்றலே நீ தழுவி நாட்டிற்கும் தழுவ விட்டாயோ!

அடடா தென்றலே உன் சேவையே சேவை: மக்களுக் காக நீ ஆற்றும் தொண்டே தொண்டு!

சமுதாயம் அறிவுபெற-உணர்வுற தன்மானத்தோடு தலைநிமிர்ந்துவாழ- எங்கெங்கெல்லாம் நீதிநெறிகள் தவழ்ந் தாடுகின்றனவோ, அங்கெல்லாம் நீ சென்று; அவற்றை எமக்கு அளிக்கிருயே! உனக்கு என்ன கைம்மாறு செய் வோம்; வாழ்க என்ற வளமான சொல் ஒன்றைத் தவிர!

தென்றலே தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அற நெறிகளை ஏற்று மாலே நேரமானதும் தமிழக விதிகளை நோக்கி ஓடி வருகிருயே ஏன்?

அதை நான் உணர்கிறேன்- நாடும் அறிகிறது; இருந் தாலும் உன் புகழையன்ருே எழுத முனைந்துவிட்டேன்.

என்னையும் ஆட்கொண்டு விட்டாய். அதனல் வரை கிறேன். என்னை மட்டுமா ஆட்கொண்டாய்? சிந்தையை! சிந் தையை மட்டுமா? சிந்தை அணு ஒவ்வொன்றையும் உன் வயப்படுத்திக் கொண்டதால் அதையும் கூறிவிடுகிறேன்.

மயக்கும் மாலைப் பொழுதான அத்திநேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக்கூட்டங்கள்தோறும் நீ உலவுகிருய்!