பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 8

தேன் படிக்கும் அமுதா! நான் படிக்கும் நூலே! ஊன் படிக்கும்-உளம் படிச்கும்.உயிர் படிக்கும்-உயிர்க்கும் உயிர் தான் படிக்கும் அதுபவங்கள் படிக்கும் கருணைக் குன்றே பொறுமையின் வானே!

உலகம் பரவும் பொருளெல்லாம் அறிவான் என்கோ: கலகம் பெறும் ஐம்புலனை வென்றவன் என்கோ! தமிழ்த் திலகம் பெற்றவன் என்கோ! உலகம் தலைவணங்க உயர்ந்தோன் என்கோ! மாணித்த ஞானமருந்தே! என் கண்ணின் ஒளியே! ஆணிப் பொன்னே! -

சீர்கொண்ட திரள் அறிவு துதல் சுருங்கும் அறிவு திறைச் சுருக்கமே! :

உனக்கே விழைவு கொண்டு ஓலமிட்டு இங்கே எனக் கென்று இருக்கின்ற இருதயத்தை உன் பால் வைத்தேன்.

தனக்கென்றும் ஒன்றுமில்லாத தயவே! பிறர்க்களிக்க மனக் கதவைத் திறந்து வைத்த அன்பு மாளிகையின் வாயிலே குடி வாழ்த்தும் கோனே! உன் வாய்ப்பட்ட வார்த்தை பெலாம் மணக்கும்.சிந்தனைக் கரம்பட்ட பொருளெலாம் மணக்கும்! நோய்ப்பட்ட சமுதாயத்தின் மருந்து நீ!

ஓயாத புகழ் வாசம் வீசுவாய் நீ! படுக்காத அறிவனே! எடுத்த புகழத்தனையும் இந். தாட்டுக்கே நீ எடுத்த புகழ்!

அடுத்துவரும் புகழெல்லாம் தமிழ்நாட்டுக்கு அன்று எதற்குண்டு?

வாங்கி ஒளிக்கீற்றை, வாரி இறைக்கும் திங்கள் தீங்கு தருவதில்லை-அங்கும் வளம் தருமே:

மூங்கை வாய் திறந்து மொழி நலனில் பேச வைக்கநீங்கள் செய்யும் பணி நிலமுள்ளவரை நீடிக்கும்.

தோள் சுமந்த புகழ்த் தோளே! நீர் செய்த செயல் எல் லாம் சேவற் கொண்டை நிறப் பூ பூக்கும் புகழ் மொய்க்கும்.

அதைக் கண்டு என் அன்னை நிலமே இன்பம் துய்க்கும். கொழுந்தேனும் செழும்பாகும் குலவும் ப்சும்பாலும் கூட்டி உண்டார்போல் இனிக்கும் குணங் கொண்டவனே!

உன்னில் என்னே ச் சேர்ப்பாய்?

என் அஞ்சலியை தின் மலரடியில் வைக்கிறேன்.