感综
அருணனை மாயமென்றறையும் நீ, அண்ணுவின் புறப் படையின் மு ன் பு உதயசூரியனை மாயை என்று உரைப் sufrGsiirr#
இஃதே போல இனியும் வெளியே இயம்பாதே என்று செந்துார மலர் செப்பக் கேட்டேன்!
என்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வர நான்பட்ட பாடு எனக்கன்ருே தெரியும்!
§ 婚 签签 οό భణ
நீலக்குவளை மலர்!
ஒடை ஒரத்தில் ஓங்காரச் சிரிப்பொலியை நொடியில் தான் கேட்டேன்!
மலர் சிரிப்பா இது! என்ற வியப்பால் நிமிர்ந்து பார்த் தேன்!
மேடைப் பூங்காற்று மோதியந்த மலர் மீது தாதை உலுக்கி விட்டுத் தாண்டிச் சென்றது.
அம்மலருக்குப் பேர், அழகுத் தமிழ்ப் பாவை வந்து கொஞ்சுகின்ற நீலக் குவளை!
அழைத்தாயா குவளேயே, என்று நான் அருகில் சென் றேன்!
எட்டாத் தொலைவிருக்கும் இந்த வானத்தின் கண் ஒளிரும் நிறம் கருநீலம்.
ஆழ்கடலின் நிறமும் அதுவே! வானத்தை மாயமெனில், வாரியினை மாயமெனில், ஞாலத்தில் எது உண்மை நவில்வீர்!
கருநீலம் உள்ளதெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தாலும், தொட்டுப் பார்த்தவரோ தொல்லுலகில் யாருமில்லை!