பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

இத்துணைச் சிறப்பு பெற்ற வேங்கை மரம் தமிழகத்தில் மட்டுமே தனிச் சிறப்புடன் வளர்கிறது.

மாயை நம்பும் மனிதா இஃதுதான் எனது வரலாறு போதுமா விளக்கம்?

வேங்கைப் பூவே உனது வரலாறு வேடிக்கை! வேடிக்கை என்ருன் மாயை மனிதன்!

நீ கூறியதைக் கேட்டேன். ஆனல் அஃது ஒரு கதை யாகவே இருக்கிறது!

ஆனல், நேரில் உன்னைப் பார்க்க முடியவில்லையே என்ருன்!

கானகமும்; மலையையும் நோக்கி ஓடிவந்து என்னை நீ காண முடியாது தான்!

அந்தோ பரிதாபம் பரிதாபம்! ஆல்ை உன் அருகிலேயே ஒரு அறிஞர் இருக்கிருர்!

நீ இருக்கும் இடத்திலேயே அவரும் உன்னுடன் நீக்கமற இருக்கிருர்!

அவரைப்பார்! அவரிடத்தே நான் கலந்திருக்கிறேன்! அதையும் கூறட்டுமா உனக்கு!

அப்படியா யார் அவர்? எங்கே கூறு என்று கேட்டான் அவன்! பூ கூற முற்பட்டு பேச ஆரம்பித்தது!

வேங்கை மரத்தின் வீரக் கதையக் கேட்டாயல்லவா?

அந்த மரம் வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றிய அமரம்!

வேங்கை மரத்தைப்போல நீண்டு வளர்ந்து, விண்முட்டும் வியப்போடு விளங்கும் ஒரு கட்சியை, தென்னவர் கோமான் அறிஞர் அண்ணு வளர்த்துள்ளார்.

அ.-4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/58&oldid=564502" இலிருந்து மீள்விக்கப்பட்டது