உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常盛

அவர்கள் ஐம்புலனுக்கும் ஆறறிவுக்கும் நடுவில் இருக் கின்ற உயிரைப்போல் உற்ருர் உறவினர்கட்கு மத்தியில் இருக்கிமூர்கள்:

உடல் கூட்டைவிட்டு வெளியே வந்த உயிர் தங்க. இடமில்லாமல் தவிப்பதுபோல் நான் மலைகளுக்கு இடையில் ஆதரவற்றிருக்கிறேன். -

எனது சிந்தனையே! நீ எங்கு சென்ருலும் சரி; திரும்பி வருகித நேரத்தில், கடைக்குச் சென்ற தாய் குழந்தைகட்குத் தின்பண்டம் வாங்கி வருவதைப்போல, இந்த உலக விடுதலைக்கு ஒரு உண்மையைக் கொண்டுவந்து கொடு:

எனது படுக்கை திடீரென்று மரணத்தால் சுருட்டப் பட்டுவிட்டால் என்னுடைய ஆசை, உறவுகளத்தனையும் :ேஆங்கைஅோடு தெருவில் திற்கக்கூடாது. .

நேரத்திற்கு முன்னுல் பார்த்த அந்த வான் லாற்றை எனக்கும் அறிவித்துவிடவேண்டும்.

勇3

பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம் அந்த அரவம் தலையை நீட்டுவதைப்போல, எனதுள்ளம் திறக்கப்படும் போதெல்லாம் என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன.

துரங்கு மூஞ்சி மரத்தின் இலைகள் அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தலையைத் தொங்க விட்டுக் கொள்வதைப்போல் என்னுடைய அத்திமக்காலத்தில், உண்மையைக் கண்டு பிடிக்கும் எனது ஆர்வங்கள் தொங்கப் போட்டுக் கொள்ளக்

நல்ல பகல் நேரத்தில் சவுக்குத் தோப்பில் கேட்கின்ற பேரிரைச்சல்போல-என்னுடைய இதயம் எப்போதும் இரைந்து கொண்டே இருக்கிறது.

திருவிழா முடிந்த பிறகு விழா முடிந்தப் பெருமையில் ஊர் திரும்பும் பக்தர்களின் முகத்திலே இருக்கின்ற அமைதிஅந்தப் பறவையின் வரலாற்றை அறிந்த பிறகு தான் எனக்கு இருக்குமென்று நம்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/75&oldid=564519" இலிருந்து மீள்விக்கப்பட்டது