உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§

ஜனநாயகத் தத்துவத்திற்கு ஆபத்தை உண்டாக்கு வோர், அவர்கள் எவரானலும் சரி, தனது கடல்கோள் போன்ற எதிர்ப்பால் அவர் அந்த அபாயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்றவராவார்.

பெரும்பகுதி தண்ணீரை வைத்திருக்கும் கடல் நீரில் குளிர்ச்சிக்குப் பதில் வெதவெதப்பு இருக்கிறது.

o

அறிஞர் அண்ணுவின் சீதளத்திரள் செறிந்த அறிவில்; இயற்கையாகவே வெதலெதப்பு இருக்கிறது.

அதன் விளைவுதான் அண்ணு அவர்களால் குளுமை இாகவும் பேசமுடிகிறது-அந்தக் குளிர்ச்சியிலே மெய்மறந்து போவார்களேயானுல், செயல் தடைபடும் அல்லவா? அப்போது வெதவெதப்பால் அவர்களை எழுப்பியாக வேண்டிய கட்டத்திலும் அறிஞர் அண்ணு இருக்கிருர்!

கரையிட்டுத் தடுத்தால் கடல் உள்ளே வராது என்துநல்லவர்களைச் சிறையிட்டுப் பழக்கப்பட்டவர்கள்-கடலுக்கு அருகாமையிலேயே, கரையாக இருக்கிருச்கள்!

கால வெள்ளத்தால் இதுவரை சக்தியிழக்காத கடலின் பகம், கரைகளுக்கு இருந்தே வருகிறது.

அறிஞர் அண்ணு ஒரு பெருங்கடல். அந்த ஊழி வெள்ளத்தை உப்புச் சிறையிட்டு ஒடுக்க முனைந்தால்-நீரின் நெருக்கத்தால் கரையின் அணுக்கள் விலகியே நிற்கும். அதனைத்தான் கடல்கோள் என்கிருேம்.

தி.மு. கழகம் என்ற அலகரங்களை வைத்திருக்கின்ற அண்ணு அவர்கள்-காங்கிரசின் えf盆)岳fráリf கரையைத் தமிழகத்தில் விழுங்கியிருக்கின்ருர்,

ஐந்தாண்டுத் திட்டங்களால், ஆழியை அடக்க முயல் பவன், வீறிட்டெழும் அலையின் வளைக்கரத்தால் எப்போதும் விழுங்கப் படுவான்.

உலகத்தின் பேரறிஞர்கள்.எப்போதும் இயற்கையின் திரட்சியாவார்கள். அவர்களின் மனுேபல சக்தி இயற்கையைச் சிறை பிடித்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/84&oldid=564528" இலிருந்து மீள்விக்கப்பட்டது