§ 2
கொண்டு வரும் அந்தக் கப்பல் கட்சிகளைத் தனது புயல் வேகச் சக்தியால் மோதி, அவர் பொடி பொடியாக்கிக் கொண்டு வருகிரு.ர்.
இதிலிருந்து நான் பெற்ற பாடம் என்னவென்ருல்தினம் தோன்றுவதற்கு முன்னலேயே இருக்குமானல், அதை எதிர்க்கும் ஒரு பொய்ச் சக்தியும் இருக்குமானல் இவைகளின் போராட்டத்தை நீதி எப்படி நியாயக் கண் கொண்டு பார்க் தேதோ, அதனைப்போல, பொதுமக்களது வாழ்க்கைக் கடலின் மத்தியில்-அவ்வாழ்க்கையின் மீதே ஊர்ந்து வரு கின்ற கயவர்களே-உறுதியாக உடைத்தெறியும் ஆற்றல் பெற்றவர் அண்ணு அவர்கள் என்பதேயாகும்.
அறிஞர் அண்ளு அவர்களின் ஆழமான உள்ளத்தில் நீதியை..நேர்மையை-இழந்தவர்களைத் தட்டிக் கேட்கும் ஒரு நியாய புத்தியைப் பனிமலையாக ஆக்கிக்கொண்டிருக்கிருர் என்று தெரிகிறது.
பணியிலேக்கு அடுத்து வெகு தூரத்தில் கடலின் மேல் மட்டத்திற்கு வந்தேன். அங்கே பவழ மலைகள் காணப்பட்ட தைக் கண்டேன்.
அத் தீவுகள் மிகக் குறுகிய அளவிலிருந்தாலும், அது இந்த விரிந்த உலகத்திலிருக்கின்ற.மக்கள் மதிக்கின்ற பவழத்தை வைத்துக் கொண்டிருக்கிறது.
பவழப் பூச்சிகள் உருவாக்கிய கூடுகள் இயற்கையின் பஞ்சபூதக் கட்டளையால் இறுகிவிடும்போதுதான், அவை நமக்குப் பவழங்களாக ஆகின்றன.
அந்தப் பவழங்களுக்கு மத்தியில் துளைகளே இட்டு ஆர மாக்கிக் கொள்வதுதான் கலையறிந்தோர் செய்ய வேண்டிய பணியாகும். அறிஞர் அண்ணு அவர்கள் பவழப் பூச்சிகளின் கூண்டுகளைப் போல மிக விலையுயர்ந்தவராக இருக்கிரு.ர்.
மிகச் சுலபமான இடக் கட்டத்திலும்-காலக்கட்டத்தி ஆம் கிடைக்கக்கூடிய பொருளாக அவர் இல்லை.