பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


கவும் சிரித்துக் கொள்ளக் கூடுமா? வினுடிகள் விரைந் தன. நாடகாசிரியன் தமிழ்ச்சித்தன், சர்வசாதாரண மான-குறை நிறைந்த ஒரு மனிதப் பிண்டமாக உரு மாறினன்.

  • ’ எனக்கும் மஹேஸ்வரிக்கும்தான் மிக அண்மை யில் திருமணம் நடைபெறப் போகிறது என்று அழுத்தம் பதித்துச் சொன்னன் தமிழ்ச்சித்தன்,

இம் முடிவுக்கு அந்தப் பெண் சம்மதித்ததா ? என்று குறுக்குக் கேள்வி கேட்டார் தனபால். அதற் குரிய பதிலே எதிர்பார்த்திருந்த வேளையில், பயங்கர மான இருமல் ஒலி கேட்கவே, அவர் பதட்டத்தோடு எழுந்து உள்ளே கூடத்தை அடைந்தார். .

துளசிங்கம் நீர்மல்கக் காட்சியளித்தார். வாருங்

கள் தனபால் சேதி வந்ததா? நல்லது. எனக்குப் பணிக்கப்பட்ட காலக் கெடு தீர்ந்துகொண்டிருக்கிற இl. அதற்குள், என் செல்வப் புத்திரனே மாலையும் கழுத்து மாகப் பார்த்துவிடவேண்டும். இதற்கு உங்களைத்தான் கான் கம்பியிருக்கிறேன். தமிழ்ச்சித்தனிடம் சொல் லுங்கள். அவன் விருப்பப்படி மஹேஸ்வரியையே அவனுக்கு மணம் முடித்து வைத்து விடுகிறேன். ஆனல் என் விருப்பப்படி, ஆண்டவன் சக்கிதானத்தில் வந்திருந்து திருப்பூட்டச் சம்மதித்தால், போதும். நீங்கள்தான் இந்த கல்ல காரியத்தை முன் கின்று கடத்திக் கொடுக்கவேண்டும்!” என்று விம்மிஞர். - தனபால் கெருங்கி அமர்ந்தார். வழிந்த நீரைத் துடைத்தார். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதீர் கள், மிஸ்டர் துளசிங்கம். என்னுல் ஆனதை கடவுள் சாட்சியாகச் செய்து முடித்துவிடுகிறேன். நீங்கள் வீணுக மனசை அலட்டிக் கொள்ளக் கூடாது.