பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


“ எனக்குக் கதைக் காதலைப்பற்றித்தான் தெரியும். ஜூலியட்-ரோமியோ, கிளியோபட்ரா-ஆண்டனி, டெஸ்டமொன-ஒதெல்லோ, அமராவதி-அம்பிகாபதி, மாதவி-கோவலன், மணிமேகலை - உதயகுமாரன், வர்சவதத்தை-உதயணன், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-கயஸ்-இந்தப் பட்டியலைத்தான் எனக்குச் சேகரம் செய்யத் தெரியும். இந்தக் காதல் ஜோடிகளின் விவகாரங்கள்தான் எனக்கு அத்துபடி. ஆனல் உன் காதல் லீலையைப்பற்றி மாத்திரம் ஏதும் அறியேன் பராபரமே !?

யார் சிரிக்க வேண்டுமென்று மஹேஸ்வரி ஆசைப் பட்டாளோ, அவள் சிரிக்கவில்லை. மாற்றுருவம் ஒன்று வேற்றுச் சிரிப்பைக் கக்கியது. எதிரொலித்த இடத் திற்குப் புலன் அறிவு தாவியது. புள்ளி சொடுக்கி நின்ற இடத்தில் சுதர்ஸனம் கின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், மஹேஸ்வரிக்கு வெட்கமாகப் போய்விட்டது. என் கேள்விக்குரிய நாயகரே பிரசன்ன மாகி விட்டாரே ? என்பதே அவள் காணப் பண்புக்கு அடிக்கார ணம். ஆனல் தெய்வயானை வெட்கப்பட வில்லை. தேடிப்போன மூலிகை பாதத்தில் சிக்கி விட்டதே ? இவரைக் கொண்டே மஹியின் சந்தே கத்தைத் தீர்த்துவிடலாம் போலிருக்கிறதே?...ஊஹூம், வேண்டாம். அது அவ்வளவு சிலாக்கியமாக இருக்க ம்ாட்டாது. ஆகவே, நானே மஹியிடம் தனிமையில் என் காதல் கடப்புக்களைப் பற்றிச் சாங்கோபாங்கமாகத் தெரிவித்துவிட வேண்டும். அதுதான் நல்லது!’ என்று முடிவை உண்டுபண்ணினுள் தெய்வயானை.

சந்தர்ப்பப் பிசகாக சுதர்ஸனம் வந்துவிட்ட காரணத்தினுல்தான் மஹேஸ்வரி வெட்கப்பட்டாளே தவிர, அவளுக்கு யதார்த்தமாகவே துணிச்சல் அதிகம்.