பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அவள்மஹேஸ்வரியேதானே...?

அதிசயங்கள் கண்ணும்பூச்சி விளையாட்டுக் காட்டவில்லையானுல், அப்புறம் வாழ்வு வெறும் பொட் டல்வெளி போலத்தான் வாழ்க்கை பொட்டல்காடாக ஆகிவிட்டால், அப்பால் உலகமே ருத்திர பூமியாகி விடும். இதனை யூகித்துத்தானே என்னவோ, வாழ்க்கை என்கின்ற நெடுந்தொலைவுப் பாதை நெடுகிலும் விக்தைச் சம்பவங்கள் அங்கங்கே, அவ்வப்போது ‘குறுக்கும் மறுக்குமாக விளையாட்டுக் காட்டுகின்றன. நியதி என்னும் கோட்பாடு குறுஞ்சிரிப்பைச் சிந்த, இயற்கையின் உள்ளங்கையில் காத்திருக்கும் சந்தர்ப் பங்கள் என்கின்ற சூத்திரக் கயிற்றைப் பற்றுகிருன் மனிதன். வாழ்வின்மீது பற்று விழுகிறது. வாழ்வு அவனுக்குப் ப்ற்றுக்கோடாக இயங்குகிறது. அதிசயங் கள் போதை யூட்டச் சிரிக்கின்றன. மனிதனுக்குச்