பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


{ { ா:ே வே } ஸ்வரி, ங்களே க் ப்” -.


“ நீங்கள் வராமல் ஏமாற்றி விடுவீர்க்ளோ என்று துடித்துப்போய் விட்டேன்!!!

வாய்மொழிதனை உதிர்த்த போது, மஹேஸ்வரியின் இதயத் தளம் அதிர்ந்தது. துடியாய்த் துடித்தது. அத் துடிப்பு, நீள் விழிகளில் தடம் பதித்தது. காத்திருந்து காத்திருந்து எத்தனை தடவை ஏமாந்தேன், தெரியுமா ? என்ற உரிமைக் கோபத்தின் உள்ளுணர்வு ஒருபுறம் குரல் காட்ட, ! உங்களுக்காக எவ்வளவு ஆவலோடு, ஆசையோடு, அன்போடு காத்திருக்கிறேன்! என்னை ஏமாற்ற உங்களுக்கு எவ்வாறு மனம் வந்தது? என்ற ஐயப்பாடு மறுபுறம் சினம் காட்ட அவள் பேசிள்ை. அவளா பேசினுள்? அவள் வர்ஷித்த கண்ணிர் அல்லவா பேசியது? அவளா பேசினுள்? அவள் கெட்டித் தள்ளிய நெடுமூச்சு அல்லவா பேசியது நெஞ்சைத் தொட்டுக் கொண்டாள். நெஞ்சகம் நிலைத்த காளத்தி தான் நேர்முகம் காட்டத் தோன்றி விட்டாரே?’ என்ற சூட்சுமப் பேச்சு உள்ளே கிளை பரப்பியது. பொருட் காட்சியில், தான் வேண்டிய விளையாட்டுப் பொம் மையை அட்டி சொல்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்ட அப்பாவைக் குழந்தை பார்க்குமே, அதுபோல அவள் அவனைப் பார்த்தாள். என் வேண்டுகோளை நிறை வேற்றிய அன்பர் என்ற இங்கிதப் பெருமிதம் அவளது இதயத்தில் சுடர் தெறித்தது. சுடரொளி கண் கமலங்களுக்கு வண்ணம் தந்தது. மாடிப்படி கடந்து ஒடிச்சென்று அவனை வரவேற்ற நிகழ்ச்சியே. அவளுக்குப் பிரமை தட்டிக் காட்டியதோ ? . . . .”

வாருங்கள், காளத்தி: }: