உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

solgol : அனு! : 9 பினுக்கு அளவு இல்லை. என் இதயம் இவர்களை நோக்கிக் குளிர்கின்றது. (அருகிற் சென்று) தும் வரவு நல் வரவு ஆகுக. நல்வரவு நல்கிய நம்பி, நீ யார்? மேகம் எனத் திரண்ட கோல மேனிய! தாமரை ஒத்து அலர்ந்த அழகிய கண்ண யான் காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன். நாம மும் அனுமன் என்பேன். இம்மலையில் வாழும் எரி கதிர்ப் பருதிச் செல்வன் சுக் கிரீவன் என் பவனுக்கு ஏவல் செய்வேன்; தேவ நும் வரவு நோக்கிச் சுக் கிரீவன் ஏவ உம்மிடம் வினவி விசாரிக்க வந்தேன்; அவர் ஆவலோடு காத்து நிற்கின்றார். (இலக்குவனை நோக்கி) வில்லார் தோள் இளை யவீர ஆற்றலும், நிறையும், கல்வியும், அறிவும், எல்லாம் நிறைந்தவனாகக் காணப்படுகின்றான். இவன் விரிஞ்சனோ? அன்றி விடைவல்லானோ? இவன் கல்லாத கலையும் பயிலாத வேதமும் இல்லை என்பது இவன் சொல்லாலேயே விளங் குகின்றது. யார் இச் சொல்லின் செல்வன்? இச் சொல்லின் செல்வன் யார்? ஒன்றும் விளங்கவில் லையே ? (அனுமனை நோக்கி) நல்லது, உங்கள் கவிக்குலத்து இறைவன் சுக்கிரீவனைக் காணும் விரு ப்பத்தினால்தான் வந்திருக்கிறோம். எங்கே இருக் கின்றார்? அங்கே எங்களை அழைத்துச் செல்ல முடியுமா? எம் தலைவரை ஆதரித்து அவரைக் காண்பதற்கு அணுகினிர் என்றால், அவர் செய்தது அரிய தவம் என்றே கூறுவேன். கதிரவன் மகனாகிய எம் தலைவர் சுக்கிரீவரை, இந்திரன் மகனாகிய வாலி அன்பற்றுச் சீறித் தாக்க, அதே துன்பத்தால் அருவி வீழும் அக்குன்றில் என்னோடு வாழ்கின்றார்.