உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இல : அனு : அனு : உம் வருகையால் அவர் வாழ்வு இனித்தான் உயரப்போகிறது. அவர் செய்த அரிய தவமே உங் களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எமக்கு அபயம் நல்கிக் காக்க வந்த முதல்வர் நீர் வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கின்றேன். உங்கள் பெருமையை நான் உணர்கிறேன். ஆனால், ஒன்று; எம் தலைவர் உங்களை யார் என்று கேட்டால், என்னவென்று கூறுவது? சிறிது விளம்பினால்--- யாரா? கேள் சொல்லுகிறேன். சூரியன் மரபில் தோன்றிய வீரன் அயோத்தி மன்னன் தயரதன் அவ ரைத் தெரியுமா? அவர் திருமகன்தான் இவ் ஆண் தகை. அவன் ஏவ, தன்னுடைய உரிமைச் செல்வம் தம்பிக்கு நலகி, நல் நெடுங்கானம் சேர்ந்துள்ளார். இவர் நாமமும் இராமன் என் பார்கள். இந் நெடுஞ்சிலை வல்லானுக்கு ஏவல் செய்யும் அடி யேன் யான். இராவணன் இழைத்த புன்தொழிலால் அன்னை சானகி.. விளங்குகிறது ஏறக்குறைய எங்கள் தலைவன் கதை யும் இதோடு ஒரளவு ஒத்து இருக்கின்றது. நீவிர் இவ்விடத்தில் இருப்பீர் யான் சென்று எம்தலை வனை இப்பொழுதே கொணர்கின்றேன் சிறிது பொழுதில். (வணங்கி விடைபெற்றுப் போதல்). காட்சி : 3 ஐயா, தயரதன் தந்த ஆட்சியைத் தாயின் ஆணை யால் இளைய வ ற்கு உதவி அவர் இங்கு வந்துள்ளார். என்ன? மறுபடியும் சொல்!