உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனு: சுக் : சுக் : 11 இளையவற்கு உதவி அவர் இங்கு வந்துள்ளார் என்றேன். இளைய வனை உளையச் செய்து இன்னல் இழைக்கின்றான் என் அண்ணன். அவன் உதவு கின்றான். முற்றிலும் முரண். சரி, வா. அவரைக் காணச் செல்வோம். (சுக்கிரீவன் இராம இலக்குவரைக் கண்டு அப்ப டியே திகைத்து நிற்கின்றான்) (அனுமனை நோக்கி) குண்டலம் துறந்த கோலமும், புண்டரி கத்தை ஒத்த குளிர்ந்த கண்ணும், மரகத வண்ணமும் என் உள்ளத்தைக் குளிர்விக் கின்றன. இவர் உண்மையில் அமரர்க்கும் அமரர். மாறி இப்பிறப்பில் மானிடர் ஆகிவந்துள்ளார். சிவனையும் அயனையும் மற்றும் உள்ள பிறவி அனைத்தையும் மானுடம் வென்று விட்டது. மனிதனின் வெற்றிதான் இராமனின் திருஉருவம். சென்று தரிசிக்கிறேன் (அருகில் செல்கிறான்) (இராமனும் கை நீட்டி வரவேற்கின்றான்) சபரி என்பாள், நீ இம்மலையில் வந்து எய்தி இருந்த தன்மையை இயம்பினள். யாங்கள் உற்ற கையறு துயரம் உம்மால் கடப்பது கருதி வந்தோம். உம்மால்தான் எங்கள் துயரம் தீரவேண்டும். முரணுடைத் தடக்கை ஒச்சி என் முன்னவன் பின் பிறந்த என்னைத் துரத்தித் துரத்தி உலகெங்கும் தொடர்ந்தான். இக் குன்றில் அரண் அடைந்து உய்ந்தேன். உயிர் துறக்கவும் முடியாமல் தவிக் கின்றேன். புவிக்கு நாயகனே! சரண் உன்னைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் நும் கடமை.