உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காட்சி 14 வசிட்டர், தசரதன், கோசலை, கைகேயி (தசரதனைத் தண்ணிர் தெளித்து மூர்ச்சை தெளிவிக்க முயல்கிறார் வசிட்டர். மன்னன் எழவில்லை.) வசிட்டர்: இராமன், வள்ளல் இராமன் உன் மைந்தன். தசரதன்: இராமன் (பிதற்றி. எழுகின்றான்) வசிட்டர்: எழுங்கள். இராமன் காட்டுக்குப் போக மாட்டான். அவனே நாடாள்வான். கேகயன் மகளும் மனம் இரங்குவாள். அப்படி அவன் காட்டுக்குப் போனால் நாங்கள் மட்டும் உயிர் வாழ்வோம் என்று நினைக்கின்றாயா? தசரதன்: இராமன் மீண்டும் வருவானா? அவன் நாடாள முடியுமா? நான் உயிர் விடுமுன் அவனைத் திருமுடி அணிவித்து நான் காண வேண்டும். ஆனால் என் வாயுரையும் பொய்க்காத வண்ணம் நீ காத்தல் வேண்டும். கோசலை: மன்னா! கேகயன் மகள் மிகவும். நல்லவள். சொன்னால் கேட்பாள், அப்படி அவள் இசையாவிட்டாலும் பரதன் வந்ததும் அவனைக் கொண்டு சரி செய்து விடலாம். தசரதன்: பரதன், அவன் எனக்கு மகனே இல்லை. அவன் முகத்திலும் விழித்துப் பார்க்கமாட் டேன். அவனைப் பார்ப்பதற்கு முன் நான் உயிர் விடுவேன். அந்தக் கொடியவனைப் பாரேன். அவனைப் பெற்றேடுத்த அந்தக் கொடியவளையும் இனிப் பார்க்கமாட்டேன். பரதனை வரவழைக்க வேண்டாம்.