உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசலை: இராமன்: கோசலை: இராமன்: 111 போகாமல் இருக்க முடியாது. விண்ணும், மண்ணும், கடலும், காற்றும் தம் நிலை மாறினாலும் தந்தைசொல் மீறி நடக்க என்னால் முடியாது. இது தெரிந்தும் தாங்கள் மனவேதனைப்படுவது வீண். அரசன் ஆணையை நீ மறுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஒன்று நீ பிரிந் தால் என் உயிர் பிரியும். நான் வாழவேண் டும் என்று நினைத்தால் என்னையும் உன்னோடு அழைத்துச் செல். இதுவாவது செய். என்னை நீங்கித் துன்பத்தில் ஆழ்ந்துள்ள மன்னனைத் தேற்றுவது யார்? என்னோடு நீ வந்துவிட்டால் உன் கடமையிலிருந்து நீ வழுவுகின்றாய். அறம் பார்க்க வேண்டாமா? எத்தனை ஆண்டுகள் இருக்கின்றன. நீ திகைக்க வேண்டியதில்லை. பத்தும் நாலும் தானே. நாட்டு ஆட்சி பரதனுக்கே போகட்டும். நான் மறுக்கவில்லை. மன்னனை மன்றாடுகிறேன். உன்னைப் போகாமல் நிறுத்துகிறேன். இது தான் நான் செய்யத் தகும் முயற்சி. முயற்சியைப் பற்றி நான் பேச விரும்ப வில்லை. மன்னன் அயர்ச்சியைப் போக்க வேண்டியது உன் கடமை. நான் சென்று வருகிறேன்.