உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 எம் தந்தை நலமா? எம் சகோதரர் நலமா? மாமன் வீட்டில் பரதன்: என் தந்தை நலமா? என் சகோதரர் நலமா? இந்த வீட்டில், கைகேயி: வானம் எய்தினான் வானவர் தொழ. நீ வருந்தாதே. பரதன்: என்ன அமைதியான பதில் தந்தை விண்ணை எய்தினார் என்று தேன்போல் மொழி கின்றாயே. கைகேயி: ஏன் என்று கேட்காதே. நல்லதுதான் நடந்தது. பரதன்: தீயைச் செவியில் வைத்துத் தேன் என்று சொன்னால், கைகேயி: ஏன் என்று கேட்காதே. எல்லாம் உன் நன்மைக் பரதன்: குத்தான். என் நன்மைக்காக எவ்வளவு நன்மைகள் அழிந் தன என்று கணக்கிட்டாயா? அறத்தை வேர் அறுத்தாய். அருளைக் கொன்று உன் அருள் நெறியை மருளச் செய்தாய். நீதியை மறைத்தாய். இதை விட மாசு வேறு உண்டோ? நீ கேகயன் மகள் என்று காட்டிக் கொண்டாய். நான் தசர தன் மகன் என்பதை மறந்துவிட்டாய்! நீ உன் தந் தையின் நலத்தைக் கேட்டாயே. நான் என் தந் தையின் நலத்தை விரும்ப மாட்டேனா? எனக்குத் தாய் தந்தை தலைவன் எல்லாம் இராமனே. அவனைக் கண்டு தான் பிறகு, என் அண்ணனை யும் எங்காவது, கைகேயி: அனுப்பி வைக்கவில்லை. அவன் கானகம் போன தால்தான் அவர் வானகம் போனார்.