உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 பரதன்: என்ன? கைகேயி: அவன் மட்டும் அல்ல. சீதை யும் அவன் தம்பியும் உடன் சென்றார்கள். நீதான் ஈமக்கடன் செய்ய வேண்டும். தந்தையின் ஈமக்கடன் உனக் காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நீ செய்யக் கூடாது. உன் தம்பி சத்துருக்கனனுக் குத்தான் அந்த உரிமை கொடுத்திருக்கிறது. பரதன். எல்லாம் திடுக்கிடும் செய்திகளாக நிற்கின்றன. ஒன் றுமட்டும் கேட்கிறேன். தந்தை இறந்த துயரால் இராமன் காடு ஏகினானா? - கைகேயி இல்லை. இராமன் காடு ஏகிய துயரால் தந்தை இறந்தார். பரதன் பெற்றவன் இருக்க மகன் காடு உற்றமை ஏன்? மிகப் புதுமையாக இருக்கிறதே? கைகேயி: வாக்கினில் வரம் பெற்று மைந்தனை வனத்திடைப் போக்கினேன். பார் உனக்கு ஆக்கினேன். மன்னன் அது பொறுக்க முடியாமல் தன் உயிர் நீங்கினான். இதுதான் நடந்த செய்தி. பரதன் என் கைகள் துடிக்கின்றன. உன் கழுத்தை முரிக்க. ஆனால் என்.அண்ணன் என் கைகளைப் பிடித்து நிறுத்துவது போன்ற உணர்வு தோன்றுகிறது. நீ கொலை செய்யத் துணிந்தாய். கேகயன் மகள் கொலை செய்வாள். தசரதன் மகன் அதைச் செய் யான். தாய் என்பதற்காக உன்னை விட்டு வைக்க வில்லை. இராமன் தம்பி என்பதால்தான் உன்னை விட்டு வைக்கிறேன். கைகேயி பேசு என்னை ஏசு, இது பழக்கமாகி விட்டது. கேகயன்மகள் உறுதி கொண்ட நெஞ்சத்தாள்; இதை மறக்காதே. அவள் மகனும் அறம் திறம்ப