உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மாட்டான். அறத்தை அறிவதற்குத்தான் சிறிது, காலம் தாழ்க்கிறது. குரல் எழுப்புகிறார்கள். கூக் குரல் இடுகிறார்கள். துடிக்கின்றார்கள். பிறகு அறம் வெல் கிறது. தானாக அடங்கி விடுகிறார்கள். வாய்மைதான் வெல்லும். அதை வெல்லவைத்து மன்னவன் மெய்யுடலை நீத்து மெய்ப்புகழைப் பெற்றான். கடமை வீரன் இராமன் தந்தையின் சொல்லைத் தட்டாமல் நடந்து கொண்டான். கேகயன் மகளும் இந்த வாய்மைக்காகத்தான் வித வைக் கோலத்தையும் தாங்கி நிற் கின்றாள். மன்னன் மடிவான் என்று தெரியும். வாய்மை மடியக்கூடாதே என்பதற்காகச் சொன்ன சொல்லை அவள் திருப்பிப் பெற வில்லை. ஒர் ஆசை அவளுக்கு இருக்கிறது. கேகயன் மகள் இந்த மணி மகுடத்தைத் தன் மகன் சூட்டிக் காண விரும்பு கிறாள். அதற்குப் பிறகு, பரதன். அவள் நினைத்த இலட்சியமெல்லாம் நிறைவேற்றி விட்ட பெருமை அடைவாள். அறம் அவளுக்கு அடி பணியாது. வாய்மை, அறம் என்ற சொல்லை விலைக்கு வாங்கிவிட்டாய். மந்திரத்தால் கட்டுண்டு மதி மயங்கினார் என் முதல்வர்கள். இப்படி ஒர் அறம் நிலைக்கும் என்று கருதுகின்றாயா? மாள வும் உளன் ஒரு மன்னன்; உன் சொல்லால் கான் ஆளவும் உளன் ஒரு வீரன். இதையெல்லாம் கண்டு வைத்து இந்தப் பார் ஆளவும் உளன் ஒரு பர தன் என்றால், இதுதான் அறம் என்றால், அந்த அறத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும். பர தன் வெறும் சொல்லுக்குப் பணியான். உண் மைக்குப் பணிவான். வன்புக்கு இணங்கான். அன் புக்கு இழைவான். சூழ்ச்சியால் பழியுடை ஆட் சியை அன்னை ஒருத்தி தருகின்றாள் என்றால் அது ஏற்க இவன் வரமாட்டான். பரதன் முறை