உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கெட்டு நெறி மாறான். நஞ்சைக் கக்கும் நாகம் என இருக்கின்றாய். நீ கற்பு என்னும் வரம்பை அழித் தாய். உன்னை அகத்தில் வைத் துப் போற்றிய மன்னனை வேர் அறுத்தாய். இவ்வரம் கொண்ட நீ இன்னும் எதைத்தான் செய்யமாட் டாய். கணவன் உயிர் போகும் என்று தெரிந்தும் விடாப்பிடியாக நின்றாய் என்றால், உன்னைப் பெண் என்று சொல்லுவதா? கைகேயி: பரதன்: கைகேயி: பரதன்: கைகேயி: பேய் என்று சொல். தாய் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படு கிறேன், பேய் என்று சொல்லவும் பின் வாங்கு கிறேன், உன்னால் பேய் பெருமை அடையும் என்பதனால், பால் ஊட்டி வளர்த்த நீ பழி யூட்டி அழிக்க முற்பட்டாய் ஒன்றும் செய்யாத மன்னனை வாயால் கொன்று நீ பழி பெற்றாய். இராமன் காட்டுக்குப் போனது கூட உன் நெஞ் சைக் கலக்கவில்லையா? நீ. கல், அசையாத கல். உரங்கொண்ட நெஞ்சள் உன் தாய். இலட்சியப் பாதையில் நிற்பவள் உன் தாய். நீ பழி பாவம் என்ற சொல்லால் உண்மையை மறக்கின்றாய். மறைக்க முயல் கின்றாய். யார் செய்தது குற்றம்? நானா அவரைக் கொன்றேன்? உன் வாய். அல்ல. அவர் வாய்மை. அதற்காக மகிழ்ச்சி அடை. கணவன், உலகம் எல்லாம் எதிர்த்த போதும் அஞ்சாது நின்றாள். இவள் கேகயன் மகள். நீ மட்டும் மருட்டினால் நான் கலங்கு வேன் என்று எண்ணுகின்றாயா? அதுதான் நடக்காது. தன் மகன் நன்றாக வாழ வேண்