உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பரதன்: டும் என்று நினைப்பது ஒவ்வொரு தாயின் உள் ளக்கிடக்கை. இவள் நீ நினைப்பது போலப் பேய் அல்லள், பெண். ஒவ்வொரு பெண்ணும் தான் தாய்மை அடைந்தால்தான் அவள் உண்மையில் பெண் ஆகின்றாள். மகன் வாழ வேண்டும் என் பது பெண்ணின் குரல். அதைக் கேட்டு இந்த உலகமே நடுங்குகிறதே. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீ அவர்கள் படித்த பள்ளியில் தானே படித்து இருக்கின்றாய் பழைய நீதிகள் தாம் உன் உள்ளத்தில் பதிந்து இருக்கும். தந்தை மறைந்தான். அது ஏன் என்று கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்னை விட நீ என்ன அவருக்கு நெருங்கிய உறவோ? நானே அவர் கொலைக்குக் காரணம் என்றாலும் கலங் காமல் நிற்கின்றேன். எல்லாம் அறம் காக்கவே. அவன் கானகம் ஏகினான் என்றால் அவன் என்னை எதிர்க்க முடியாமல் என்று நினைத்தாயா? நான் செய்வது தவறு என்றால், அது கடமை என்று ஏற்றது ஏன்? தந்தை இறக்கின்றார் என்று தெரியும். தெரிந்தும் அவன் ஏன் காடு ஏகவேண் டும். தந்தையைவிடக் காடு பெரிதா? வாய்மை பெரிது என்பதால், அதுவே மன்னனின் கட்டளை: ஏற்க வேண்டும் என்பதால், அதைத் தட்டி நடக்க உனக்கு உரிமை கிடையாது. அவர்கள் செய்தது தவறு என்று நான் சொல்ல வில்லை. அறத்திற்காக மன்னன் உயிர் துறந்தான். அதே அறத்தின் அடிப்படையில்தான் அண்ணனும் அரசுச் செல்வம் துறந்தான். தாயின் சூழ்ச்சியால் ஞாலம் அவனோடு பிறந்தவன் ஆண்டான் என் னும் இழிசொல்லை நான் மட்டும் ஏன் ஏற்க வேண்டும்? அறத்தால் அவர்கள் புகழ் அடைந் தார்கள். அதே அறத்தைக் காட்டி என்னை