உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ததோ? அறமெல்லாம் வேரோடும் கேடாக முடித்து என்ன விளைவித்தாய்? கைகேயி: இதுதான் வேறுபாடு. நீ பார்க்கின்ற பார்வை பரதன்: வேறு நான் பார்க்கின்ற பார்வை வேறு. இதில் என்னைப்பற்றி நான் எப்போதுமே சிந்திக்கவில்லை. இனியும் சிந்திக்கப் போவதில்லை. நான் விதவை ஆவேன் என்பதும் எனக்குத் தெரியும். இராமன் காட்டுக்குப் போனால் இந்த நாடே அழுகையில் ஆழும் என்பதும் எனக்குத் தெரியும். இதற்கெல் லாம் அஞ்சாத நான், நீ என்னைக் கொல்லப் போகிறாய் என்பதைத்தான் கேட்க நிற்கின்றேன். கொல்லப்போவதற்கு நான் அஞ்சவில்லை. உன் தாய் கேகயன் மகள் உறுதிகொண்ட நெஞ்சினள் என்பதனை நீ நினைவில் கொள். உலகத்தின் பழிக்கு நீ அஞ்சவில்லை. நான் அஞ்சு கின்றேன். உன்னைக் கொன்றால் தாயைக் கொன்ற பழி என்னைச் சாரும். நாட்டை ஆள ஒருப்பட் டால் மீளாப் பழிக்கு ஆளாவேன். அமுது என்று நஞ சைப் படைத்து வைத் திருக்கின்றாய். அந்த நஞ்சை உண்டால்தானே அது என்னைக் கொல்லும். நீ அமைத்த ஏற்பாட்டிற்கு இசைந்தால்தானே பழி என்னைச் சாரும். கைகேயி: உன் கோழைமை கண்டு நான் இரங்குகின்றேன். உலகம், பழி என்ற இரன்டு சொற்களுக்கு அஞ்சு கிறாய். எந்த உலகத்துக்கு நான் அஞ்சவில்லையோ, எந்தப் பழிக்கு நான் வணங்கவில்லையோ, அந்த உலகத்துக்கும், பழிக்கும் நீ அஞ்சுகிறாய். இதற்குப் பாசம், பரிவு, அறம் என்ற உயர்ந்த சொற்களுக் குப் பொருள் கொடுக்க நினைக்கின்றாய். கொண்ட கணவனை இழந்தேன், வளர்த்த மகனைத் துறந்தேன். பெற்ற மகன் எனக்குப் பகையாவான்