உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதன்: 137 என்று எதிர்பார்க்க வில்லை. இங்கேதான் என் சிந்தனை தோற்றுவிட்டது. நீ கேகயன் மகள் என்பதை உணர்கிறேன். நான் தசரதனின் மகன் என்பதை உணரவில்லை நீ. இங்கேதான் தவறு செய்துவிட்டாய். உன் வயிற் றில் பிறந்தேன் என்று உரிமை கொண்டாடுகின் றாய். அதற்காகத்தான் நான் சிறுமை அடைகிறேன். பிறந்த மண்ணால் ஒரு செடிக்குப் பெருமையில்லை. அதன் விதையால்தான் அதற்குப் பெருமை உண்டாகிறது. பரதன் யார்? அவன் உன் மகன் நான் குழந்தையாக இருக்கும் பொழுது தசரத னின் மகன் அன்றும் இன்றும், இராமனின் தம்பி அது என்றும் இதை மறந்துவிட்டாய். கைகேயி தசரதனின் மகன் நீ இராமனின் தம்பி நீ;அதை பரதன்: மறக்கவில்லை. அதைத்தான் இன்று உண்மை என்று காட்ட வேண்டுகிறேன். கேகயள் மகன் குழந்தை அல்ல நீ ஏமாந்து போவதற்கு தசரதன் மறைந்தான்; இராமன் துறந்தான். இப்பொழுது யார் இந்த ஆட்சியை மேற்கொள்வது? தசரதனின் மகன் இராமனின் தம்பி என்பது உண்மையானால் ஆட்சிக்கு உரிமை ஏற்று நாட்டின் நலத்தை நீ கவனிக்க வேண்டும் நான் என்ன செய்தேன். குழப்பம் மிகுகிறது. கல்லையும் உடைக்கலாம். இரும்பையும் வளைக் கலாம். நெருப்பையும் அணைக்கலாம். வெள்ளநீரையும் நிறுத்தலாம். உன் நெஞ்சின் ஆழத்தைக் கண்டு உன்னை மாற்ற. கைகேயி:நீ சிறுவன். பழைய ஏடுகளைப் படித்து அதுதான் பண்பு, நெறி, தருமம். கடமை என்றெல்லாம் எண்ணி வளர்ந்தவன் நீ. கேகயன் மகள் புதிய சிந் தனை கொண்டவள். அடிமையற்ற உணர்வும்,