உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பரதன்: அஞ்சா உரனும் தெளிந்த அறிவும் கொண்டவள். உள்ளம் அலைகடலுக்கு அசையாத பாயமரம். கொந்தளிப்புக்குச் சிதையாத கோபுரம், காற்றுக் குச் சாயாத பெருமரம். அவள் உள்ளத்தை நீ ஒருவனாவது உணர்வாய் என்று எண்ணினேன். இரண்டே வழி தான் உள்ளது.ஒன்று உன் ஏவலுக்கு அடிபணிந்து உலகத்தின் பழிக்கு ஆளா வது. அல்லது, உன்னைக் கொன்று மீண்டும் பழி மிகுந்தவனாக ஆவது. கைகேயி: அதிலாவது உனக்கு வீரம் இருந்தால் நான் மிகப் பரதன்: கைகேயி: பரதன்: பெருமை அடைவேன். இராமன் பழிக்கு அஞ் சினான், தசரதன் அதே பழிக்கு அஞ்சி உயிர் விட் டான்; என் மகன் பழிக்கு அஞ்சாமல் ஒருபடி உயர்ந்துவிட்டான். தாயைக் கொன்ற மாவீரன் என்று பெருமை அடைவான். உன்னைக் கொல்வதால் நீ உயர்ந்து விடுவாய். நான் தாழ்ந்து விடுவேன். நீ உயிரோடு வாழ்வதுதான் நல்லது. உலகம் உன்னைக் கண்டு நகைக்க வேண் டும். பழித்துப் பழித்து உன்நெஞ்சைக் கலக்க வேண்டும். பித்தம் பிடித்து நீ அலைய வேண்டும் உன் உறுதி குலைந்து உலைய வேண்டும். நான் இன்னது செய்ய வேண்டும் என்பது எனக்கே தெரியவில்லை. அதுதான் உன் தந்தை சொல்லிப் போய்விட்டாரே. பரதன் நாடாள வேண்டும். இதுதான் அவர் வாய்மை தவறாத ஆணை. ஐயோ கொடுமை! என்னை மறுபடியும் சிக்க வைக்கின்றாயே! அவருக்கு நாடாளும் உரிமை எனக்குக் கொடுக்க உரிமை இருக்கிறது. அதை ஏற்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தது