உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கைகேயி தற்கொலை, பரதன். அது தான், நான் திரும்பி வருவதற்குள் நீ அதைச் செய்து முடித்தால், கைகேயி தற்கொலை! தற்கொலை ! பரதன். ஆம் வருகிறேன். அதற்குள் செய்து முடி! காட்சி : 23 கூனி, கைகேயி கூனி: தற்கொலை! தற்கொலை!! கைகேயி எது? கூனி: நம்மை நாமே கொலை செய்வது. கைகேயி மகனைப்பெற்று அவன் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்பது. வரலாற்றை மாற்றிவிட்டான். நீ போட்ட கணக்கு அத்தனையும் மாற்றிவிட்டான். யாருக்காக இந்த வரம் கேட்கச் சொன்னாயோ அவனே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கூனி மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல ஆகியது. கைகேயி மண் குதிரையும் கரைகிறது; நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். அவன் என்னையே கொல்லத் துணிந்து நின்றான். கூனி: அட பாவி! கைகேயி அதைச் செய்ய முடியவில்லையே என்பதற்குத்தான் வருந்துகிறேன். அப்பொழுதே தசரதனும் அதைச் செய்ய மறந்துவிட்டான். சாகின்றவனுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்கக் கூடாதா? நான் கொடிய