உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி: 14] வள் என்பதைத் தெரிந்தும் என் னைக் கொல்லாமல் விட்டுவிட்டான். இதுதான் கொடுமை. இராமனாவது அவன் தன் வீரத்தை என்னிடம் காட்டியிருக்கக் கூடாதா? இலக்கு வனாவது தன் சீற்றத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா? அறம் அறம் என்று சொல்லி எல்லாரும் அடங்கிவிட்டார்கள். என் மகனாவது என்னைக் கொன்று உயர்புகழ் அடையக் கூடாதா? எல்லோரும் கோழைகளாகி விட்டார்களே என்று நினைக்கும்பொழுது, அதுதான் எனக்கு வேதனை யாக இருக்கிறது. என்னை நானே கொல்ல வேண் டுமாம். தற்கொலை செய்து கொள்ள வேண்டுமாம். எவ்வளவு கோழைத்தனம் என்னைக் கொல்லத் துணிவு இல்லாத ஒரு கோழை பழிவருமே என்று அஞ்சி என்னையே நான் கொன்று கொள்ள வேண்டுமாம். எதற்காக நான் வாழ்வது என்று எனக்கே தெரிய வில்லை. உன் ஒருத்திக்காகத்தான் நான் வாழ்கின் றேன், முன் என் கூனைக்கண்டு எள்ளியவர்கள் என் கொடுமனத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். என்னை யும் தொடுவதற்கு அஞ்சுகிறார்கள். நானும் யாரா வது என்னைக் கொல்லுவார்களா என்று ஆசைப் படுகிறேன். யாரும் அதைச் செய்ய அஞ்சுகிறார் கள். கூனிகனி என்று சொல்லுகிறார்களே தவிர யாரும் என்னை ஒழிக்கத் தயங்குகிறார்கள். கைகேயி: அப்பொழுது நான்தான் உன்னைக் கொலை கூனி: செய்ய வேண்டும். நீதான் என்னைக் கொலை செய்ய வேண்டும். அந்தத் துணிவு உனக்கும் எனக்கும்தான் இருக்கிறது. வேறு வழி இல்லை. என்னை நீ கொன்று விடு; எனக்கு விடுதலை கிடைக்கும்.