உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 9Igolے இரா : 13 மெளனம் சாதிக்கின்றாய்? (கை கூப்பித் தொழுது உரைக்கின்றான்) நீதி நிறைந்த தலைவனே! சிறிது செவி சாய்க்க வேண்டுகின்றேன். அன்று நடந்தகதை அது மிக நீண்ட கதை சுருக்கமாக உரைக்கின்றேன். கேட்க வேண்டும். இவர் அண்ணன் ஆற்றல் மிக்க வாலி முன்னொரு சமயம் மாயாவி என்பானோடு பெரும் போர் செய்தான். இருவரும் ஒர் பிலத்துள் நுழைந்தனர். அவர்கள் திரும்பி வரவே இல்லை. ஆதலால் மந்திரச் சுற்றத்தவர் சுக்கிரீவனை ஆட்சிக் காவல் செய்ய ஏவல் இட்டனர். அவர்கள் இட்ட பணியை மறுக்க முடியாமல் எம் தலைவர் ஆணை ஏற்று ஆட்சி செலுத்தினார். மாயாவி திரும்பவும் மேலே வராமல் இருக்கப் பிலத்து வாயைக் கற் களால் மூடினர். முடிந்த கதை என்று எண்ணி னோம் முடியவில்லை. மாயாவியைக் கொன்று வாலி பிலத்தின் வெளியே வந்தான். அவன் கண்ட காட்சி அவனையே திகைக்க வைத்தது. அவன் தவறாகக் கருதிவிட்டான். வருத்தினான் தம் பியை வலிமை மிக்க வாலியின் கொலைத்தொழி லுக்கு அஞ்சி இவர் ஒடி ஒளியாத இடமே இல்லை. அவன் வலிக்கு அஞ்சி ஒடிப்பிழைக்க இம்மலையை நாடி அரண் புகுந்துள்ளார். முனிவர் ஒருவர் இட்ட சாபத்தால் வாலி இங்கு வரமுடியாது. உருமை என்பாள் இவர் தாரத்தையும் அவன் விரும்பினான். இதுதான் நடந்த வரலாறு. தாரம் இழந்து தனித்து இருக்கின்றார் எம் தலைவர் சுக்கிரீவன். தம்பிக்கு என் அரசு உரிமையை நான் நல்கினேன். இங்கு இவன் தன் தம்பியின் தாரத்தை வெளவு கின்றான். இச்சொல் என்னால் தரிக்க முடியாது. உலகம் ஏழும் வந்து அவனுக்கு உதவி செய்தாலும், வாலியின் வலியை வீழ்த்தி தும் தாரமும் உமக்கு