உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வசிட்டர்: பரதன்: உத்தமி என்று சொல்வது வியப்பாக இருக் கிறது. குறை எங்கே தோன்றியது என்று சிந்தித்தாயா? அவள் கே.க யன் மகள் என்பதை யார் நினைவுபடுத்தியது? இந்த வீட்டு மருமகள் ஆனதும் அவள் இன்னொருவீட்டு மகள் என் பதை மறுப்பதற்கு வேண்டிய சூழ்நிலையை உண் டாக்கியிருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவளைக் கேகயன் மகள் என்பதை யார் நினைவுபடுத்தியது? இந்த வீட்டு மருமகள் என்பதை அறிவதற்கு வேண்டிய சூழ் நிலையை உண்டாக்கியிருக்க வேண்டும். கேகயன் மானே என்றுதான் மன்னன் விளித்து வந்தான். இதை யாராவது மறக்க முடியுமா? இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவளைக் கேகயன் மடந்தை என்றுதானே கிளத்தி வந்தனர். அவளோடு வந்த கூனி பொதிந்து இருந்த பஞ்சில் நெருப்பை வைத்தாள்; அது பற்றிக் கொண்டது. அவள் வெறும் கருவியே தவிர, அவள் காரியம் என்று கூற முடியாது. கொடுமனக் கூனியும் ஒரு மனத்தாயும் ஒன்று சேர்ந்த சூழ்ச்சிப் புயல், இதில் எத்தனை பேர் சிக்கிவிட்டனர். சுற்றிச் சுற்றி வீசி எத்தனை பேரைப் பற்றியுள்ளது. ஆற்றல்மிக்க அறிவு அவர்கள் சிந்தனை. மன்னன், அமைச்சர், வசிட் டர், இராமன், இலக்குவன், இந்த நாடே அவர் கள் சுழற்சியில் தப்பமுடியவில்லை. என்னையும் இறுக்கி அழித்து அவர்கள் கற்பனைக்குக் கருவியாக்க நினைக்கிறார்கள். நான் எப்படியும் ஆட்சியில் அமர்வதாம். அது ஒன்று நடந்தால்