உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கைகேயி: கூனி: கைகேயி: என்று பாராட்டிப் பேசினானாம். பரதன் ஆயிரம் இராமரைப் புகழில் வென்று விட்டான். பழி துடைத்து வாழ்ந்தான்; அவன் புகழ் அழி யாது. பலரைத் தியாக வாழ்வில் புகுத்தியது இந்தக் கேகயன் மகள்தான்; அவரவர் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத் தது இந்தக் கேகயன் மகள்தான், இராமனைக் காவியத் தலைவன் ஆக்கியதும் நான்தான். பல புதிய அனுபவங்களை உண்டாக்கித் தந்தவள் நான்தான். தசரதன் பல மகளிரை மணந்து ஒழுக்கத்தில் உயர முடியாமல் போய்விட்டான். இராமன் ஒரு த் தியோடு வாழ வாய்ப்பு உண்டாக்கியது நான்தான். அவனும் பட்டம் சூடி இருந்தால் இட்ட மகிஷிகள் எத்துணை பேர் அவனைச் சூழ்ந்து இருப்பார்களோ! சீதை யின் அன்பு வாழ்க்கையை அவன் உணர்ந்து உயர்ந்த தலைவனாக வளர்வதற்கு வேண்டிய வாய்ப்பு அளித்தவள் நான்தான். எதற்கு எடுத் தாலும் சீற்றம் கொண்டு சினத்தவனாக விளங் கும் இலக்குவன் அடக்கம் என்பதை அறிந்து பயில்வதற்கு இதைவிட நல்ல வாய்ப்பு எப்படிக் கிடைத்திருக்கும்.? எப்படியோ நம் திட்டம் நிறேவேறுகிறது. எல்லாம் இராமனைச் சந்தித்த பிறகுதான் முடிவு தெரியும். பரதன் அங்கேயே தங்கி விடுவானோ? மீண்டும் நாட்டை ஆளத் திரும்புவானோ? போகப் போகத்தான் தெரியும் எப்படியும் இராமன் திரும்பி இப்பொழுது வர மாட்டான் பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் திரும்புவான். அதற்குள் என் மகனுக்கு நல்ல