உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி: கைகேயி: கூனி: கைகேயி: 155 வாய்ப்புக் கிடைக்க இருக்கிறது. ஆட்சியில் நீதி யும் நிம்மதியும் நிலைக்கச் செய்வான். பரதனின் ஆட்சியைவிட இராமன் சிறப்பாக ஆண்டிருக்க முடியாது என்பதை உணர்வார்கள். இராமன் தசரதனால் உண்டாக்கப்பட்ட தலைவன். தசர தன் மகன் என்பதால் அவனுக்குப் பெருமை. அதே மோகத்தால் அவனை வழிபடத் தொடங் கினார்கள். அங்கே தனி மகனுக்குப் பெருமை. என்மகன், அவன் ஆட்சியின் சிறப்பால் ஒப்பற்ற பெருமை அடையப் போகிறான். ஆணவமற்ற நிலையில் நின்று அவன் ஆட்சி செய்யப் போகிறான். பழி என்றால் என்ன என்பதை என் வாழ்வால் அவன் படிப்பினையைக் கற்றுக் கொண்டான். பழியால் இழிவு வராத ஆட்சியை அவன் படைத்துக் காட்ட முடியும். அப்பொழுதுதான் கேகயன் மகளின் உயர்வை இந்த மாநிலம் உணரப்போகிறது. மக்கள் பெருமையால்தான் பெற்றோர்க்குப் பெருமை உண்டாகிறது. என் வாழ்வு உண்மை யில் நிறைவு பெறுகிறது. நான் தாய் என்பதன் பயனை அடைவேன். ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும். அதுவே தாய்மையின் வெற்றி. என் மகன் சான்றோன் என நானிலமே நவில்கிறது. இதுதான் வெற்றி அவன் ஆட்சியை இருந்து காணும் பேறுதான் நான் செய்த தவத்தின் பேறு. இப்பொழுது நம் நிலை. தனிமை தான். இதுதான் தவம்.