உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இராமன்: பரதன்: படு, மகுடம் சூடு, மலங்கி வையகம் கலங்கி வைக நீ விரும்பியதைச் செய்து இங்கே இருப் பாயோ? உலகம் கலங்காமல் இருக்க நீ புறப் படு; நாடு திரும்பு. நீ ஆட்சியைக் கொடுக்கின்றாய், சரி. அன்று அவர் குறித்த பதினான்கு ஆண்டுகளும் இன் றோடு முடிந்துவிடுமா? வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் தூய்மை வேறு உளது என்று கூறுமோ? தீமை என்பது வாய்மையினின்று நீங்குவது அன்றி வேறு எது? எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழும் நான் வனத்துள் வைக எனக்கு நீ தந்த பாரினை உனக்குத் தருகிறேன். இந்தப் பதினான்கு ஆண்டுகள் நீ இதனை ஆள வேண்டும் இஃது என் ஆணை. மன்னவன் இருக்கவும் மணி அணி மகுடம் சூடுக என்று அவர் கூற யான் ஒப்புக்கொண் டது அவர் ஏவியது மறுக்க அஞ்சி. அதே போலத்தான் நீயும் நான் இருந்தாலும் என் ஆணையை நினைத்து ஆட்சி ஏற்று நடத்து. என் ஆணையை நீ மறுக்க முடியுமா? ஐய, துயர் உழந்து அயராதே. இதற்குமேல் என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. பதினான்கு ஆண்டுகள் கழிந்ததும் ஒரு நாள் கூடத் தங்கேன் இந்த ஆட்சியில்; வருகிறேன்.