உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்: பரதன்: 157 யும், பொறையில் நீங்கிய தவமும், அருள் துறையின் நீங்கிய அறமும் முறையின் நீங்கிய அரசைவிடக் கொடுமையாகுமோ? மூத்தவன் முறைமையால் ஆளவேண்டிய ஆட்சியை உன் னைத் தவம் செய்யும்படி விட்டுவிட்டு இளைய வன் நான் ஆட்சி செய்வதா?அஃது அறத்தைக் கொல்வது என்று கூறுதைத் தவிர வேறு என்ன என்று கூறமுடியும்? உன்னைப் பிரிந்த சோகத் தால் மன்னன் உயிர்விடவும், புகையும் வனத் தில் நீ புகவும், புத்திசாலியாக நான் மட்டும் வஞ் சனையோடு அரசு வவ்வ நான் உனக்குப்பகை வனா? தந்தை செய்த தீமையும் உலகு பொறுக் காத நோய்தந்த தீவினையைத் தந்த தாய் செய்த தீமையும் நீங்க மீண்டும் நீ. அரசு செய்ய வேண் டும். இதுதான் என் சிந்தையும் சிந்தனையும் தந்தையும் தாயும் நம் கண்கண்ட தெய்வங்கள். தாய் வரம் கொள்ளத் தந்தை ஏவலால் மேய நம் குலத்தருமத்தை மேவினேன்; அவர்கள் அறிவித்த அரிய நெறியை நீ வேண்டுவதால் விட்டுக் கொடுப்பது நீர்மையாகுமோ தனயர் ஆயினார் தந்தை தாயரைத் தட்டி நடப்பது வன்பழியை உண்டாக்காதா? அவர்கள் சொற்களைத் தட்டி அதனால் வாய்மையைப் பொய்ப்பித்து, அவர்களை நரகுக்கு அனுப்பி வைத்து, நன்னிதிக்குவையில் வைகி வாழ்ந்து, செம் மைசேர் நிலத்து அரசு செய்வேனோ? வரத்திலே தரணி உன்னது என்று அமைந்து விட்டது. அதனை ஆளும் உரனும் உன்பால் உள்ளது. ஆதலால் அரசு உன்னதே ஆள்க நீ. நீ பிறந்த பார் என்னது ஆகில் யான் இன்று உனக்குத் தந்து விட்டேன்; மன்னன் நீ! புறப்