உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இரா: வாலி: உலகில் எல்லா உடன்பிறந்தவர்களும் ஒற்றுமையா கப் பாசத்தோடு வாழ்ந்துவிட்டால், பரதன் உத்த மன் என்ற புகழ் எப்படி நிலவும்? நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு. பூவிற்குப்புல்லிதழ் உண்டு. இந்தக் குறைகளைக் கண்டு இவற்றைப் புறக்கணிக்க முடியுமா? குற்றமற்றவரைத்தான் துணை நாடுவோம் என்றால், அது அரசியலுக்கு ஒவ்வாது; கூட்டு அமைப்பு உண்டாக்கவே முடியாது. அதோ வாலியும் சுக்கிரீவனும் நெருங்கி விட்டார்கள். (இருவரும் போரிடுகின்றனர். சுக்கிரீவன் நன்றாகத் தாக்கப் பெறுகிறான். இராமன் மறைந்து நிற்கும் இடத்தில் ஏக்கத்தோடு பார்க்கிறான்) (சுக்கிரீவனைப் பார்த்து) உங்கள் இருவரில் யார் வாலி என்று காணமுடியவில்லை. அதனால்தான் செயலற்று இருந்தேன். கொடிப்பூ அணிந்து போருக்கு நில். அப்பொழுதுதான் வேறுபாடு தெரியும். (இருவரும் மீண்டும் மலைதல். சுக்கிரீவன் கீழேயும் மேலே வாலி யும், ஒங் கிக் குத்த முயல்கிறான், (இராமன் அம்பு பட்டு வாலி சாய்கிறான்.) (அந்த அம்பைப் பிடுங்கி அதனை ஆராய்கிறான்) தேவரோ? அவர் இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ? திருமாலின் சக்க ரமோ? நீலகண்டன் நெடுஞ்சூலமோ? முருகன் வேலோ? இந்திரன் வச்சிரப்படையோ? இச்சரத்தை வில்லினால் செலுத்த முடியாது. சொல்லினால் நெடு முனிவர் தூண்டியிருக்க வேண்டும். இல்லை, இது சாதாரண அம்புதான். இதில் ஏதோ பெயர் எழுதியிருக்கிறதே!