உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்: வாலி: வாலி: 19 அண்ணா, மன்னிக்க முடியாத குற்றம் இழைத்து விட்டேன். (அவன் மீது பாசத்தால் சாய்தல்) என்னை மன்னித்துவிடு. பெயர் இராமன், இராமன், நீயா? இல்லறம் துறந்த நம்பி எங்களுக்காக வில்லறம் துறக்க வேண்டுமா? உன்னால் உன் மரபு மாசுண்டது. நல்லறம் கெட்டுவிட்டது. ஒ! இதுவும் ஒர் ஒங்கு அறமோ? மறைந்திருந்து அம்பு செலுத்துவதும் மன்னர் வகுத்த புதிய அறமோ? இது எனக்குத் தெரியாது. இராமனே முறை திறம்பினான் என்றால், இந்த உலகத்து மற்றைய இழிந்துள்ளோர் இயற்கை: (இராமன் அவன்முன் காட்சி தருதல்) வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் உன் தந்தை. அத்தகைய தூயவன் மைந்த னல்லவா நீ? பரதன் முன் பிறந்தவன் அல்லவா? தீமை என்பது மற்றவர்கள் செய்யக்கூடாது என்று வகுத்துக்காட்டித் தான் செய்தால் அது நன்மை யாகிவிடுமா? குலம், கல்வி, கொற்றம், நலம், தலைமை, வெற்றி இவையெல்லாம் பெற்ற நீயா உறுதி குலைந்து அறுதி செய்தாய்? அரசியல் தருமமெல்லாம் உங்கள் குலத்து உதித்தவர்கட்கு எல்லாம் உடைமையன்றோ? ஒவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை அரக்கர் ஒர் அழிவு செய்தால் அதற்கு வேறு ஒர் குரக் கினத்து அரசைக் கொல்ல மனு நெறியா கூறியுள்ளது? இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்? பெரும் பழியை நீ பூண்டால் புகழை யார் தாங்கவல்லார்? கலிகாலம் வருகிறது என்று சொல்கிறார்களே, அது இந்தக் கொலை