உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 யிலா புகவேண்டும். ஒழுக்கம் விழுப்பம் என்பது எல்லாம் மெலியவர்க்கு வலியவர் உரைக்கும் வெற்றுரையோ! கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தந்தை பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்தாய் நாட்டில் நல்ல புகழை நிலைநாட்டினாய்! காட்டில் என் தம்பிக்கு இங்கே ஆட்சியை நல்கி மற்று இங்கே பழியைத் தேடிக் கொண்டாய் முறை திறம்பிய நீ, இலங்கை வேந்தன் முறை அல்லன செய்துவிட்டான் என்று முனிகின்றாயே! அது எப்படிப் பொருந்தும்? இருவர் போர் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் உறவினர்கள். ஒருவர் மேல் கருணை துண்ட ஒருவர் மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தல் தருமமா? அல்லது இச்செயலுக்கு வேறு ஏதாவது புதிய பெயர் தரப் போகிறாயா? ஐயா! உம்செய்கை வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின் வழி யும் அன்று. நின் மண்ணுக்கு நான் என்னபாரமா? நான் உனக்குப் பகைவனா? பண்பு அழிந்து, ஈரம் இன்றி, இது செய்தாய்! என் செய்தாய் நீ? அறம் காக்கின்ற பெருமை என்பது இதுதான்? ஒருமை நோக்கி ஒருவனுக்கு உதவுவதுதானா அறம்? இது அறம் அல்ல; அரசியல் முயற்சி என்று கூறுகின் றாயா? சிங்கத்தை விட்டுச் சிறுமுயலைப் பற்றுவது தான், முயற்சியா? திங்களுக்குக் களங்கம் உண்டு; சூரியன் மரபுக்கு ஒர் களங்கம் வேண்டும் என்று தெரிந்து செய்தாயா? மற்று ஒருத்தன் வலிந்து போருக்கு அறைகூவ, அவனை நோக்கி நான் சென்றேன். என்னை ஒளிந்து உயிர் உண்ட நீ, நான் இறந்து வீழ்ந்த பின் சிங்க ஏறு என நிமிர்ந்து