உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா: வாலி: வாலி: 21 நிற்கிறாயே? நூல் இயற்கையும், நும் குலத்துப் பெரியோரின் குல இயற்கையும், சீலமும் போற்றவில்லை. நீ வாலியை வீழ்த்தவில்லை; அறவேலியைப் பிரித்தாய். நீயும் ஒரு வெற்றிவீரன் என்று கூறிக்கொள்ள வேண்டியதுதான். தாரம் மற்று ஒருவன் கொள்ள அதற்கு உன் வீரமும் பழுதாக வேண்டுமா? மறைந்து நின்று நிராயுதன் மார்பில் எய்யவா உன் வில் திறமை பயன்பட்டது. போதுமா பேசியது? இன்னும் பேச வேண்டுமா? நீ செய்தன நினைத்துப்பார். பிலம் புகுந்தாய், திரும்பி வரமாட்டாய் என்று முதியவர் சொல்ல, அதற்காக ஆட்சி ஏற்றான் உன் தம்பி, அவனைக் கொல்ல முயன்றது முறையா? அபயம் என்று உன்னை அணைந்த அவனுக்கு அரண் செய்யாமல் அழிவு நினைத் தாய். தம்பி என்றும் அருள் செய்யவில்லை. இவற்றை எல்லாம்விட நீ செய்தது மன்னிக்க முடியாத குற்றம், அருமை உன் தம்பியின் ஆர் உயிர்தேவியை அடைய நினைத்தாயே அதுவே உன் பெருமையை நீக்கிவிட்டது. ஆதலால்தான் உன்னை ஒழிக்க முயன்றேன். அதைவிட சுக்கிரீவன் என் உயிர் நண்பன் என்பதாலும் உன்னைக் களைந்தேன். நாங்கள் குரங்கினத்தைச் சார்ந்தவர்கள் என்பதை மறந்து பேசுகின்றாய்! ஒருவன் ஒருத்தி என்பது எங்களுக்கு இல்லை. இந்த அடிப்படையை மறந்து என் மீது குற்றம் சுமத்துகிறாய்! இனம் குரங்கினமாகலாம். ஆனால் நீ அறிவு நிரம்பியவனாய் இருக்கின்றாய். உன்னை மனிதனாகவே நான் மதிக்கிறேன். சரி, ஒப்புக்கொள்கிறேன். நான் மேலும் விவாதிக்க