உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்: அனு: சுக்:

[g9/9ئے

சுக்: 25 மாருதி வந்து சேருவான் கடற் பெருஞ் சேனையோடு. அதோ மாருதியும் வந்துவிட்டான். தானையின் அளவினை யான் எடுத்துரைப்பதை விட நிரே அடுத்துக் காண்பது மேல். குரங்குகள் அத்துணையும் தேவியை நாடித் தேடித்தரும் பணியில் இனி இறங்கும். ஐயன் கட்டளைக்காகக் காத்து நிற்கின்றன. நீயும் அங்கதனும் தென்திசைக்கு ஏகுங்கள். கள்ள வாள் அரக்கன் வள்ளல் தேவியை வஞ்சித்துச் சென்றது அங்கு தான் என்று என் உள் ளம் கூறுகின்றது. தாரை மைந்தன் அங்கதனும் சாம்ப வனும் மற்றும் வீரர் யாரும் சேர்க நின்னொடும். வடதிசைக்குச் சதவலி ஏகட்டும்; குட திசைக் கண் வினதன் செல்லட்டும். மற்றும் ஒன்று கூறுவேன் கேள்: ஒரு திங்கள் முற்றுதற்கு முன் உங்கள் செயல் முற்றுப் பெற வேண்டும். அப்படியே செய்வோம். திங்கள் முடிவதற்குள் எங்கள் கடமையை முடிப்போம்; இதோ புறப்பட்டு விட்டோம். இதோ! இங்கே இருந்து நேரே விந்தமலையை அடையுங்கள். தேடிப் பிறகு நருமதை உன்னுவீர்! அதற்குப் பிறகு ஏம கூட மலையை எய்துவீர்! பெண்ணை நதி கடப்பீர். தண்டகமும் முண்டக மும் கடந்து பாண்டுவின் மலை அடைவீர். தென் னாட்டை அடைந்து கோதாவரி பொன்முகலி கடந்து சென்றால் வேங்கடம் கண்ணுக்குப் புலனாகும். வேங்கடத்தைக் கடந்தால் தமிழ் நாட்டை அடைவீர். தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு