உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அனு:

goll/9ئے

இரா. அனு: மு னிவன் அகத்தியன் வாழ் தமிழ் ச் சங்கம் சென்றால் அவன் வாழும் பொதிகைமலைக்கு வணக்கம் செலுத்துங்கள். அதனையும் கடந்தால் இராவணன் வாழ் இலங்கையை அடையலாம். எப் படியும் ஒரு திங்கள் எல்லையில் திருவினைத் தேடித் திரு வினையை முடிக்க வேண்டும். அப்படியே! அன்னை இருக்கும் இடத்தைத் தேடி முன்னம் வந்து சொல்வேன். மாருதி! உன் னிடம் தனியே சில பேச விரும்புகிறேன். இதோ வருகிறேன். (இராமனும் அனுமனும் தனியே) சீதையை எப்படி அறிவாய்? அவளைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாதே! அந்த எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. அன்னை தேவியின் அழகிய தோற்றத்தைச் சொன்னால் கண்டு கொள்வேன். ஒவியத்தில் எழுதவொண்ணா உருவத்தை நான் எப் படி வடித்துக் கூறுவேன். காவியத்தில் பாட ஒண் ணாக் கவின்மிக்காளை எப்படி நான் உரையிட்டு உன்னிடம் உரைப்பேன். எந்த அடையாளமிட்டு. உனக்கு எடுத்துரைப்பேன். அவள் அங்க அடை யாளங்களை அடுக்கிச் சொல்ல நான் கவிஞனல்ல, எனினும் ஒன்று கூறுவேன். மங்கையர் இவளை ஒப்பார் இவ்வுலகில், மண்ணில் விண்ணில் எங்கும் என்றும் இல்லை என்னும் தெளிவு உன் உள்ளத்தில் பிறந்தால் அதையே சான்று எனக் கொண்டு அவளை அறிதி.