உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:goll/9ئے இரா: 27 அவள் நிலைமையையும், சூழ்நிலையையும் எல் லாம் அளந்து அவளைத் தெரிந்துகொள். அப்படியே செய்வேன்! நான் அன்னையைக் கண்டு கொள்வேன். அவர் எப்படி என்னைக் கண்டுகொள்ள முடியும். அது தான் எனக்கு விளங்கவில்லை. அடையாளங்கள் ஈதோ சொல்கிறேன். அதனை அவளுக்கு உரை. அவ்வுரை அவள் உயிரைத் தளிர்க்கச் செய்யும். உன்னையும் அவள் கண்டு கொள்வாள். முன்னைநாள் முனியோடு மிதிலையில் கன்னிமாடத்திடை அவளை நான் கண்டதை எடுத்துக்கூறு. வில்லை முரித்த செய்தி கேட்டு அவள், சீதையின் குரல்: "போடி! யார் அது! அந்த முனிவனொடு வந்த இளைஞனா அவரையன்றி வேறு யாரையும் மணக்க மாட்டேன்! இது உறுதி. அவர் அல்லவேல் உயிரை மாய்ப்பேன். (தொடர்தல்) என்று அவள் தெரிவித்த கரையற்ற காதலை அவளுக்கு உரைத்து நினைவு படுத்து. மற்றொன்று சொல்லுகிறேன் கேள். காட்டுக்கு நீயுமா வரவேண்டுமென்று நான் கேட்டேன். அதற்கு அவள், சீதை யின் குரல் : காட்டுக்கு நான் தவிர ஏனைய தங்களுக்கு இனியவோ! நான் ஒருத்திதான் கசக் கின்றேனே? என்னை விட்டுச் செல்வதுதான் தங்களுக்கு இனிமையோ? என்று கேட்டாள். மாநகர்த் துறந்து ஏகும் நாள். ன்னும் மதிலையும் கடக்கவில்லை. அதற்குள் அவள்: