உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வளர்க, இராமன் நாமம் வாழ்க! (அனுமன் நேரே கடலை நோக்குகிறான்) சாம்பவன்: என்ன! கடலைக் கண்டு. அனு: கலங்கவில்லை. கடக்க விரைகின்றேன். சாம்: நாங்கள் இங்கேயே இருக்கின்றோம். உன்னைத் தவிர வேறு யாரும் கடக்க முடியாது. நாங்கள் கடலைத் தாவ முடியும். அங்கதன். ஆனால், திரும்பி வரும் ஆற்றல் எங்களுக்கு இல்லை. நீர் மட்டும் போய் வாரும். நாங்கள் இங்கேயே நிற்கின்றோம். சாம்: வாழ்க அனுமன்! வெல்க அவன் திறம் சூழ்க கடலை! ஆழ்க எம் துயர்: அழிக அரக்கர்! அனு: இதோ மயேந்திரமலையின் உச்சிக்குப்போய் ஒரே தாவு. சாம்: தாவி, இராமனின் ஆவி அனையாளைக் காண வேண்டும். அங்: பிறகுதான் எங்கள் ஆவியும் நிற்கும் வருக, போய் வருக! காட்சி:10 சீதை, திரிசிடை, அனுமன் (சீதை கண்களில் நீர் பொழிந்த வண்ணம் சோகத் தோடு அமர்ந்திருக்கின்றாள். அரக்கியர் ஒரு சிலர் வருவதும் போவதுமாகக் காட்சி அளிக் கின்றார்கள். பிறகு ஒரு பக்கம் சாய்கின்றார் கள். திரிசடை வருகின்றாள்) திரிசடை தேவி! இன்னும் உறங்காமல் விழித்துக் கொண்டா இருக்கின்றீர்!