உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:1(ی:s ||(لئے சீதை: 43 லில் நான் நம்பிக்கை இழந்தவளாகின்றேன். உன் கருத்துக்கு நன்றி. அதை மறுப்பதைவிட வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. நான் மட்டும் தப்பிவந்தால் போதுமா? அறம் வாழ வேண் டாமா? இன்னல் இழைத்த இராவணனைப் பின் னப் படுத்தவேண்டாமா? இழிவைப் படைத்த அவ னைப் பழி வாங்க வேண்டாமா? நீ கடமை மற ந்து பேசுகின்றாய்; நீ சொல்லின் செல்வன்; ஆனால், பண்பின் செல்வமும் அச்சொல்லில் பயி ன்று இருக்க வேண்டும். இதுவே என் பணிவான மொழி. அன்னையே, மன்னிக்க வேண்டுகிறேன்! ஆர்வத் தால் அறிவு மறந்து பேசிவிட்டேன். அண்ணலைக் காண்பேன்; விரைவில் உங்களைச் சிறை மீட்போம். இது உறுதி. இன்னும் ஈண்டு ஒரு திங்கள் மட்டும்தான் இருப் பேன். பின்னை யான் உயிரோடு வாழேன். இது மன்னனின் ஆணை மனத்தில் கொள் நீ. இந்தச் செய்தியை அம்மன்னவர்க்கு எடுத்துரை நீ. ஆரம் தாழ் மார்பனுக்கு அமைந்ததோர் தாரம் நான். அது அல்ல என்று கருதினாலும் தயா என்னும் ஈரம் வேண்டு; அதுவும் இல்லை என்றாலும், தன் வீரங்காத்தல் வேண்டும் என்று நீ வேண்டுவாய். இலக்குவனுக்கும் ஈதொரு வார்த்தை சொல் லுதி. மன்னனின் அருளால் என்னைக் காத்திருந்த அவருக்கே என்னைச் சிறையினின்று மீட்பதும் கடமை என்று விளம்புவாய். திங்கள் ஒன்றில் என் செய்தவம் தீரும். பின்னை நான் வாழும் ஆற்றல் இல்லை எனக்கு. அதற்குள் அவர் இங்கு வரவில்லை என்றால், அல்லது வர இயலவில்லை என்றால், கங்கை