உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அனு: யாற்றங் கரையிலேயே அடியேனுக்குத் தன் செங்கையாற் கடன் செய்க என்று செப்புவாய். அரசு வீற்றிருந்து ஆளவும், புரசை யானை யில் வீதியிற் போகவும், விரசு கோலங்கள் காண வும் விதியிலேன்; இன்னும் உரைசெய்து என்ன பயன்? எல்லாம் என் ஊழ்வினை; எல்லாம் என் ஊழ்வினை, இராமனை நோக்கி அயோத்தி காத்துக்கொண்டிருக்கிறது. அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றி, என்னை நோக்கி இங்கு எங்ங்னம் வர இயலும்? எந்தையர் சனகர் முதலினர் கிளைஞர் யாவர்க்கும் என் வந்தனை விளம்புதி. உங்கள் தலை வன் கவியின் மன்னனை, சுக்கிரீவனை ஒன்று வேண்டுதி. சுந்தரத் தோளனாகிய இராமனை விடா மல் தொடர்ந்து காத்துப் போய் அயோத்தி நகருக்கு அவனை அரசனாக்கு என்பாய். இது என் வேண்டுகோள். அன்னை நீர் விளம்புவதும் அத்துணையும் இய ம்புவதற்கு இல்லை; அவை நடவாதன நீரும் வீழ் வீர்! இராவணனும் வாழ்வான். இராமனும் அயோத்தி புகுவான் இதெல்லாம் வீண் கற்பனை, வீண் பிதற்றல்; கற்பின் ஒவியத்தைச் சிறைப்படுத் திய அவ்வற்பன் உயிரோடு வாழ்வதா? அது ஒருக்காலும் நடக்காது ஈண்டு ஒரு திங்கள் நீர் இடரின் வைகவும் வேண்டுவதில்லை. யான் விரைவில் வீரனைக் காண்பதே குறைவு. பின் காலம் வேண்டுமோ! ஆண்டகை இனியொரு பொழுதும் ஆற்றுமோ ஒருக்காலும் ஆற்றார். அவர் துன்பத்தை நீர் உணராமல் பேசு