உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதை: அனு: 45 கின்றீர். ஆவி உண்டு என்னுஞ்சொல் உண்டே தவிர, அவர் உண்மையில் நடைபிணமாகத்தான் வாழ்கின்றார், சோகம் வந்துறுவது தெளிவு பெற் றால்தானே! மேகம் வந்திடித்தாலும், இடி ஏறு வந்து அடுத்தாலும், ஆகமும் புயங்களும் அழுந்த ஐந்தலை நாகம் வந்து அடர்த்தாலும் அவர் உணர்வு தோன்றுவதே இல்லை. மத்துறு தயிர் எனத் தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறப் பித்தனாய் வாழ்கின்றார். உம் மைப் பிரிந்த வேதனை எத்தனை உள்ளன? அவை எண்ணும் அளவுக்கு அடங்குமோ! இந்நிலை உடையவர் பொறுக்கும் என்று எண்ணுவது பொருந்தாது. யான் புகன்ற யாவும் உள்ளங்கை நெல்லியம் கனியிற் காட்டுவேன். மெய்ந்நிலை ஈது. இதனை உணர்ந்து எனக்கு விடை தந்து உதவ வேண்டுவேன். செல்லுதி ஐய, விரைந்து தீயவை யாவும் வேறு இனி ஒன்றும் விளம்பேன். முன் சில அடையாளங்களை நான் கூறுகின்றேன். இதனை மட்டும் அவருக்கு உணர்த்தினால் போதும். அவை தாங்கள் அளிக்கும் சொற் செல்வமாகக் கருதித் தாங்கிச் செல்வேன். அருளுக. பல சொல்வதைவிட ஒரு சில மட்டும் சொல்கிறேன். இதை நினைலில் நிறுத்தி எடுத்துச்சொல். என்னொரு இன்னுயிர் மென்கிளிக்கு யார் பெயர் இடுவது மன்னா என்று கேட்டேன், அதற்கு. இராமன் குரல்: மாசறு கேகயன்மாது என் அன்னை தன் பெயர் வைக்க