உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2

/g9/9ئے

அங்: சாம்: இல்லை. நா கூறும் நிலையில் இல்லை. அன்னையின் அருந்தவத்தை என் நா கூறும் நிலையில் இல்லை. அவர்கள் அளித்த ஒளிமிக்க சூடாமணியைக் கொண்டு வந்துள்ளேன். யாதும் இனி வேறு எண்ண வேண்டியது இல்லை. அண்ணலின் தேவி தன்னைக் கண்டது விரைவிற் செப்பி அவ்வண்ணல் அருந்துயர் அகற்றலே நாம் செய்யத் தக்கது. வாழ்க அனுமன்! வெல்க இராமன்! காட்சி : 1.5 (தென்திசை நோக்கித் தலைமீது வணங்கிய கையினனாக அனுமன் உள்ளே நுழைகிறான்) இராமன்: வணங்கிய கையனாய் வருகின்றான். இணங்கிய இரா: அனு: செய்தியே கொண்டு வந்திருப்பான். சொல்லின் செல்வன்! சொல்லாமல் நிற்கின்றாயே! நீ அவளைக் கண்டதும் உண்டு. அவள் தொழுத் தக்க கற்பினாள் என்பதையும் உணர்த்துகிறாய். (அனுமன் மீண்டும் தென்திசை நோக்கித் தொழு கின்றான். பேச்சு இல்லாமல் அப்படியே கண்களில் நீர் அரும்ப மகிழ்ச்சி தெரிவிக்கின்றான்) பேசு! சீதையைக் கண்டாயா? இல்லை. தேவியைக் காணவில்லை. நான் கண்டது பெண்னை அல்ல, பெண்மையைக் கண்டேன். கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் இலங்கைத் தென்னகரில் ஐயனே! இனி தவிர்தி