உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:fg DIقے 53 ஐயமும் பண்டுள துயரமும். ஐயா! உன் பெருந்தேவி என்னும் உரிமையை நிலைநாட்டிவிட்டாள். தசரதனின் மருமகள் என்ற வாய்மைக்கும் விளக்கமாக நின்றாள். மிதிலை வேந் தன் தன் பெருந் தனயை என்னும் தன்மைக்கும் தகைமை சான்றாள். நீங்கள் பெருமைபடக் கூடிய நிலைமையில் அவள் விளங்குகின்றாள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவள் என் பெருந் தெய்வம் அய்யா நான் வழிபடக் கூடிய தெய்வத் தன்மையை அவளிடம் காண்கிறோம். பொன்னுக்கு நிகராகப் பொன் அலது இல்லை. அவளுக்கு நிகர் அவள் அன்றி வேறு இல்லை என் பதை அவள் காட்டி விட்டாள். அவளை உரிமை யாகப் பெற்ற உன்னை ஒப்பார் வேறு உலகில் இல்லை என்பதையும் உணர்த்தி விட்டாள். அவளைக் கண்ட பேறுபெற்ற எனக்கு நிகர் நானே என்பதையும் எனக்குத் தந்திருக்கின்றாள். உன் குலம் உன்னதாக்கித் தன் குலம் தன்ன தாக்கி இத்தனிமை செய்த இராவணனின் வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தையும் வாழ் வித்து என்குலம் எனக்குத் தந்தாள். எல்லோரும் பெருமைப்படும்படி அவள் அங்கே தவ விளக்காய் ஒளிவிடுகின்றாள். உன் சொல்லின் செல்வத்துக்கு அளவே இல்லையா! இன்னும் எவ்வளதான் உயர்த்திப் பேசப் போகின் றாய்! எவ்வளவுதான் பேசமுடியும்; விற்பெருந் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண் டேன் என்று சொல்வதைவிட இற்பிறப்பு என்ப தொன்றும் இரும்பொறை என்பதொன்றும் களி