உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இரா:

/g9/?ئے

நடம் புரியக் கண்டேன் என்று சொல்வதில் நான் பெருமைப் படுகின்றேன். இலங்கை மாநகரில் ஒரு பக்கம் விண்ணளா விய சோலையில் உம் தம்பி புல்லினால் தொடுத்த பன்னசாலையில் இருந்தாள் ஐய! தவம் செய்த தவமாம் தையல். சோகத்தாளாய இந்நங்கை கற்பினால் அவள் மட்டும் பெருமை அடையவில்லை. பெண் குலமே பெருமை அடைகிறது. வானுலகத்து மங்கையர் அனைவரும் வான் சிறப்பு உற்றார்கள். பார் வதியைச் சரிபாகத்தாள் என்றோ, இடபாகத்தாள் என்றோ இனிக் கூறமுடியாது. அவள் இனி ஈசன் உச்சியில்தான் இடம் பெறுவாள். அவளை மகுடத்தாள் என்று தான் கூறமுடியும். திருமகளும் இனித் திருமாலின் மார்பில் வாழாள். அவள் உச்சியில் உயர அமர்வாள். இனி மண்ணுலகத்து மாதர்களும், பெருமையோடு விளங்குவார்கள். பெண் குலத் திற்குப் பெருமை தந்தாள். என்பதை இப்படி எல்லாம் உன் சொல்லாற்றலால் வளைத்துவளைத் துப் பேசுகின்றாய். அது போகட்டும்; நான் கொடுத்த கணை ஆழி? மகிழ்ச்சியும் சோகமும் ஒருசேர அவளிடம் கண்டேன். அந்த மணி அவள் கையகத்துப் பட்ட தும் அதன் மெய்த்தன்மை மாறிவிட்டது. அவள் அதனை அணைத்தபோது மணி அங்கு இல்லை. அவள் உன்னைத்தான் அதில் கண்டாள்; அவள் மேனிகுளிர்ந்தது. அக் கணையாழி வஞ் சர் நாட்டுக்கு வந்ததே என்று தன் கண்ணிரால் அதனைக் கழுவி நீராட்டினாள்.